உலகிலேயே பிரித்தானியாதான் பாதுகாப்பான இடம் என்று நினைத்தேன்... படுகொலை செய்யப்பட்ட கனேடிய இளம்பெண்ணின் தாத்தா கதறல்
ஒன்லைனில் சந்தித்த காதலனை சந்திப்பதற்காக பிரித்தானியாவுக்கு பயணித்த கனேடிய இளம்பெண் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நிலையில், தான்தான் அவளை பிரித்தானியாவுக்கு போக உற்சாகப்படுத்தியதாக அந்த பெண்ணின் தாத்தா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த Ashley Wadsworth (19), இணையம் வாயிலாக தான் சந்தித்த Jack Sepple (23) என்னும் நபரை சந்திப்பதற்காக சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி, பிரித்தானியா சென்றுள்ளார்.
ஆனால், பிப்ரவரி மாதம் 1ஆம் திகதி, மாலை 4.00 மணியளவில் Chelmsfordஇல் அமைந்துள்ள எசெக்சிலுள்ள வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
அங்கு அவர்கள் மருத்துவ உதவிக் குழுவினருடன் விரைந்தபோது, Ashley கத்திக்குத்துக் காயங்களுடன் இரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார்.
மருத்துவ உதவிக்குழுவினர் எவ்வளவோ முயன்றும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
Ashley, யாரை காதலர் என்று நம்பி சந்திப்பதற்காக கனடாவை விட்டு முதன்முறையாக பிரித்தானியா சென்றாரோ, அதே Jackஆலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டுவிட்டார்.
இந்நிலையில், பிள்ளையை இழந்த சோகத்திலிருந்து இன்னமும் வெளிவரமுடியாமல் Ashleyயின் குடும்பத்தினர் தவித்து வருகிறார்கள்.
தனது பேத்தியை பிரித்தானியாவுக்குச் செல்லும்படி தான்தான் உற்சாகப்படுத்தியதாக தெரிவித்துள்ள Ashleyயின் தாத்தாவான Jeff Wadsworth (66), தான் உலகிலேயே பிரித்தானியாதான் பாதுகாப்பான இடம் என நம்பியதாக தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பயணம் வாழ்க்கையில் மறக்க முடியாததாக இருக்கும் என்று எண்ணி, தன் பேத்தியை பிரித்தானியாவுக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கும் Jeff, உலகிலேயே இங்கிலாந்துதான் பாதுகாப்பான இடம் என நம்பி அவளை அனுப்பி வைத்ததாகவும், ஆனால், இப்படி ஆகிவிட்டது என்று கூறி கண்ணீர் வடிக்கிறார்.