உடல் கருகிய நிலையில் ஆணின் சடலம்... குடும்ப நண்பரின் கொடுஞ்செயல்: லண்டனில் அதிர்ச்சி சம்பவம்
மேற்கு லண்டனில் 7 மாதங்களுக்கு முன்னர் மாயமான இளைஞர் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், குடும்ப நண்பர் உட்பட மூவர் சிக்கியுள்ளனர்.
உடல் கருகிய நிலையில் ஆணின் சடலம்
குறித்த கொலை வழக்கில் தொடர்புடைய அம்ராஜ் பூனியா என்பவர், சம்பவம் நடந்த அன்று, ஆறுதல் கூறும் பொருட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க அவர்களது குடியிருப்புக்கு சென்றுள்ளதும் தற்போது அம்பலமாகியுள்ளது.
Image: Steve Parsons/PA
ஹீத்ரோ விமான நிலைய ஊழியரனா முகமது ஷா சுபானி என்பவர் கடந்த 2019 மே மாதம் 7ம் திகதி மாயமானதாக கூறி குடும்பத்தினரால் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தன்று மதியத்திற்கு மேல், அவரது துணையை அழைத்துவர அவர் செல்லாத நிலையிலேயே, சந்தேகத்தின் அடிப்படையில் குடும்பத்தினர் அன்று புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், 7 மாதங்களுக்கு பிறகு சிறப்பு அதிகாரிகள் குழுவினர் அதிரவைக்கும் ஒரு துயர சம்பவத்தை கண்டறிந்தனர். பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள ஜெரார்ட்ஸ் கிராஸ் மற்றும் பீக்கன்ஸ்ஃபீல்டுக்கு இடைப்பட்ட வனப்பகுதியில் உடல் கருகிய நிலையில் ஆணின் சடலம் ஒன்றை மீட்டனர்.
கைகள் கட்டப்பட்ட நிலையில், நெருப்பு வைக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பு உறுதி செய்தது. மேலும், திரைப்பட பாணியில் இந்த கொடுஞ்செயல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உள்ளூர் போதைப்பொருள் வியாபாரி
சுபானி ஒரு கிலோ வரையிலான கஞ்சா திருடியதாக கூறியே மூவர் குழுவால் கொலை செய்யப்பட்டுள்ளார் என விசாரணையில் அம்பலமானது. சுபானி வசமிருந்த கஞ்சா களவு போன நிலையில், அவர் உள்ளூர் போதைப்பொருள் வியாபாரிக்கு பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
Image: Steve Parsons/PA
சுபானி கொலை வழக்கில் சகோதரர்களான அம்ராஜ் பூனியா(27), மற்றும் ரணீல் பூனியா(25) இவர்களுடன் குர்தித்தா சிங்(25) என்பவரும் விசாரணை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.
இவர்களுடன் மேலும் மூவர் மீதும் ஆதாரங்களை அழித்தல் உட்பட பல பிரிவுகலில் வழக்கு பதியப்பட்டுள்ளது. சுபானியின் சகோதரரின் நண்பர் இந்த அம்ராஜ் பூனியா.
இவரே, சுபானி கொல்லப்பட்டதன் இரண்டாவது நாள் ஆறுதல் கூறும் பொருட்டு சுபானியின் வீட்டுக்கு சென்றவர் என்ற தகவலும் நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.