பிரித்தானியாவை உலுக்கிய பாடசாலை சிறுமி விவகாரத்தில் முக்கிய திருப்பம்: அதிகாரிகள் வெளியிட்ட தகவல்
ஒன்பது வயது சிறுமி ஒலிவியாவின் கொலையில் சந்தேகத்தின் பேரில் 36 வயது நபர் கைது
நாங்கள் பெற்ற உதவி மற்றும் ஆதரவிற்கு ஒரு குடும்பமாக என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்
பிரித்தானியாவில் குடியிருப்புக்குள் புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாடசாலை மாணவி ஒலிவியா கொல்லப்பட்ட நிலையில், தொடர்புடைய நபரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
@PA
திங்கட்கிழமை இரவு லிவர்பூல் நகரின் மெர்சிசைட் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் ஒன்பது வயது சிறுமி தனது வீட்டின் முன் கதவுக்கு அருகில் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானார்.
இந்த வழக்கினை விசாரித்து வந்த மெர்சிசைட் பொலிசார் தெரிவிக்கையில், ஒன்பது வயது சிறுமி ஒலிவியாவின் கொலையில் சந்தேகத்தின் பேரில் 36 வயது நபரை கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
@dailymirror
ஹுய்டன் பகுதியைச் சேர்ந்த இவர் கொலை முயற்சி வழக்குகளில் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிறுமி ஒலிவியா தொடர்பில் கண்ணீர் அஞ்சலி கூட்டத்தில் பேசிய உறவினர்கள், இந்த வழக்கில் தொடர்புடைய தகவல் ஏதும் தெரியவந்தால் உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்த கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், உலகெங்கிலும் உள்ள மக்களிடமிருந்து நாங்கள் பெற்ற உதவி மற்றும் ஆதரவிற்கு ஒரு குடும்பமாக நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளனர்.
@dailymirror