தாயையும் மகனையும் கொன்ற கனேடியர் வழக்கு: குற்றவாளிக்கு தண்டனை அறிவிப்பு
ஆல்பர்ட்டாவில் வாழ்ந்துவந்த இளம்பெண்ணை வன்புணர்ந்து கொலை செய்து, அவரது குழந்தையையும் கொலை செய்த கனேடியர் ஒருவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அழகான குடும்பத்துக்குள் நுழைந்த நபர் செய்த கொடூரச் செயல்கள்
ஆல்பர்ட்டாவில் தங்கள் 16 மாதக் குழந்தை Noahஉடன் வாழ்ந்துவந்தனர் Mchale Busch (24), Cody McConnell தம்பதியர்.
2021ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி, அவர்களுடைய வீட்டுக்கு அருகிலேயே வாழ்ந்துவந்த Robert Keith Major என்னும் நபர், தம்பதியரின் வீட்டுக்குள் நுழைந்து Mchaleஐ வன்புணர்ந்து கொலை செய்திருக்கிறார்.
குழந்தை Noah அழுதுகொண்டே இருந்ததால் எரிச்சலடைந்த Robert, குழந்தையைக் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கிறார்.
GoFundMe
பக்கத்து வீட்டிலேயே வசித்து வந்த குற்றவாளி
விடயம் என்னவென்றால், Robert ஏற்கனவே பாலியல் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். பாலியல் குற்றம் ஒன்றிற்காக சிறை சென்று விட்டு 2017ஆம் ஆண்டு வெளியே வந்த Robert ஒரு பாலியல் குற்றவாளி என்றும் அவர் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடலாம் என்றும் பொலிசார் எச்சரித்துள்ளனர்.
ஆனால், தனக்கு விதிக்கப்பட்ட விதிகளை மீறி 300 கிலோமீற்றர் பயணம் செய்து Hinton என்ற இடத்துக்கு வந்து ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தங்கியிருந்திருக்கிறார் Robert.
அதே குடியிருப்பில்தான் Mchale, Cody தம்பதியர் தங்கள் குழந்தையுடன் வாழ்ந்துவந்துள்ளார்கள்.
ஆக, தங்கள் வீட்டுக்கு அருகிலேயே குற்றவாளி ஒருவர் வாழ்ந்துவந்தது யாருக்கும் தெரியவில்லை. இது அரசின் கவனக்குறைவு என்று கூறும் Mchale, Cody குடும்பத்தினர், பாலியல் குற்றவாளிகள் குறித்து பொலிசார் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தால் இப்படி ஒரு துயரம் நடந்திருக்காது என்கிறார்கள்.
இந்நிலையில், ஆல்பர்ட்டாவிலுள்ள Hintonஇல் அமைந்துள்ள நீதிமன்றம் ஒன்று, நேற்று Robertக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அவரால் 25 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.