முதல் சர்வதேச போட்டியிலேயே இந்திய அணியை அலறவிட்ட வீரர்! தனியாளாய் போராடி சாதனை சதம் அடித்த ரோகித்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய அவுஸ்திரேலிய வீரர் டாட் முர்பி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அறிமுக டெஸ்ட்
நாக்பூர் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டாட் முர்பி அறிமுக வீரராக களமிறங்கினார். சுழற்பந்து வீச்சாளரான அவர் கே.எல்.ராகுலை தனது முதல் விக்கெட்டாக வீழ்த்தினார்.
அதன் பின்னர் அடுத்தடுத்து இந்திய அணிகளின் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். மேலும் அஸ்வின், புஜாரா, கோலி, கே.எஸ்.பாரத் என முர்பி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
@CricketAus
ரோகித் சர்மா சாதனை
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இதன்மூலம் ஒரு கேப்டனாக அனைத்து வகை போட்டிகளிலும் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
@Icc
அதேபோல் சர்வதேச அளவில் இந்த சாதனையை படைத்த 4வது கேப்டன் ரோகித் சர்மா ஆவார். இதற்கு முன்பு இலங்கையின் தில்ஷன், தென் ஆப்பிரிக்காவின் பாப் டு பிளிசிஸ், பாகிஸ்தானின் பாபர் அசாம் ஆகியோர் மூன்று வித கிரிக்கெட்டிலும் சதம் அடித்திருக்கிறார்கள்.
@CricketAus