தீபாவளி ஸ்பெஷல்.., பொட்டுக்கடலை வைத்து மொறுமொறு முறுக்கு எப்படி செய்வது?
Murukku recipe- பொதுவாகவே, தீபாவளி என்றாலே வீட்டில் பலகாரம் செய்வது வழக்கம்.
அதன்படி, குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் மிகவம் பிடித்த ஒரு தின்பண்டமாக இருப்பது முறுக்கு தான்.
அந்தவகையில், மொறுமொறு பொட்டுக்கடலை முறுக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பொட்டுக்கடலை- 1 கப்
- அரிசி மாவு- 4 கப்
- எள்ளு- 1½ ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- பெருங்காய தூள்- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை சேர்த்து நன்கு அரைத்து பின் சலித்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, அரைத்த பொட்டுக்கடலை மாவு, எள்ளு, சீரகம், பெருங்காய தூள், உப்பு மற்றும் சூடான எண்ணெய் சிறிதளவு சேர்க்கவும்.

அடுத்து இதை தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் முறுக்கு அச்சில் மாவை போட்டு பிழிந்து பொன்னிறமாக பொறித்து எடுத்தால் பொட்டுக்கடலை முறுக்கு தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |