உடலிற்கு சத்தான முருங்கைக்கீரை ராகி அடை.., எப்படி செய்வது?
சத்தான ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல தாதுக்களும் நிறைந்துள்ளன.
அதேபோல், முருங்கைக்கீரை முடி வளர்ச்சியை அதிகரிக்க, நரைமுடி மறைய மற்றும் உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
ஆரோக்கியம் நிறைந்த இந்த முருங்கைக்கீரை ராகி ஆடையை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், உடலிற்கு சத்தான முருங்கைக்கீரை ராகி அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ராகி மாவு- 1 கப்
- அரிசி மாவு- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- இஞ்சி- சிறிதளவு
- முருங்கைக்கீரை- 1 கப்
- வெங்காயம்- 1
- பச்சைமிளகாய்- 1
- சீரகம்- 1 ஸ்பூன்
- தேங்காய்- ¼ கப்
- நல்லெண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
பின் இதில் துருவிய இஞ்சி, முருங்கைக்கீரை, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், தேங்காய் சேர்த்து தண்ணீர் ஊற்றி இலகுவாக பிணைந்துகொள்ளவும்.

அடுத்து பிணைந்த மாவை வட்டமாக தட்டி வைத்துக்கொள்ளவும்.
இறுதியாக அடுப்பில் ஒரு தவா வைத்து சூடானதும் தட்டிய மாவை நல்லஎண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்தால் சத்தான முருங்கைக்கீரை ராகி ஆடை தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |