இரும்புச்சத்து மிகுந்த முருங்கைக்கீரை தொக்கு: எப்படி செய்வது?
முருங்கை இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளன.
இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் முருங்கை கீரையை சாப்பிட்டு வரலாம்.
இதில் வைட்டமின்கள் பி, சி, கே, புரோ விட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
மருத்துவகுணம் நிறைந்த இந்த முருங்கை கீரையில் சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கைக்கீரை தொக்கு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- முருங்கை கீரை-3 கைப்பிடி
- துவரம் பருப்பு- 2 டீஸ்பூன்
- கடலை எண்ணெய்
- நல்லெண்ணெய்
- காய்ந்த மிளகாய்-12
- சீரகம்- 1ஸ்பூன்
- வெந்தயம்-1/2 ஸ்பூன்
- பூண்டு-10 பல்
- வெங்காயம்-2
- தக்காளி-1
- உப்பு- தேவையான அளவு
- மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
- புளி- எலுமிச்சை அளவு
- கடுகு-1 டீஸ்பூன்
- உளுந்தம்பருப்பு-1/2 டீஸ்பூன்
- கருவேப்பிலை- 1 கொத்து
- பெருங்காயம்-1/2 டீஸ்பூன்
செய்முறை
முதலில் குக்கரில் 3 கைப்பிடி அளவிற்கு சுத்தம் செய்த முருங்கை கீரை அதனுடன் துவரம் பருப்பு 2 டீஸ்பூன் சேர்த்து தண்ணீர் ஊற்றி 7 விசில் வரும்வரை வேக வைக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் கடலை எண்ணெய் 4டீஸ்பூன, காய்ந்த மிளகாய்8 ,சீரகம் ,வெந்தயம், பூண்டு, வெங்காயம், தக்காளி, சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் அதில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு,சேர்த்து நன்கு வதக்கவும்.
chitra's deli-dishes
இதை நன்கு ஆற வைத்து அதில் புளி சேர்த்து சூடு ஆறியதும் மிக்ஸியில் அறைக்க வேண்டும்.
தாளிப்பிற்கு நல்லெண்ணெய் 4 டீஸ்பூன் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து அரைத்து வைத்த தொக்கை சேர்த்து கிளறவும்.
அதன் மேல் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி மூடி போட்டு 5 நிமிடம் அப்படியே வைத்து பின் திறந்தாள் சுவையான மற்றும் ஆரோக்கியமான முருங்கைக்கீரை தொக்கு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |