உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கும் முருங்கை கீரை தொக்கு.., எப்படி செய்வது?
முருங்கை இலைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளன.
இதில் வைட்டமின்கள் பி, சி, கே, புரோ விட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மாங்கனீசு, இரும்புசத்து மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
அந்தவகையில், மருத்துவகுணம் நிறைந்த ஆரோக்கியமான முருங்கைக்கீரை தொக்கு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய்- தேவையான அளவு
- காய்ந்த மிளகாய்- 7
- சீரகம்- 1 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- வெந்தயம்- ½ ஸ்பூன்
- கொத்தமல்லி- 1½ ஸ்பூன்
- முருங்கை கீரை- 2 கைப்பிடி
- புளி- எலுமிச்சை அளவு
- உப்பு- தேவையான அளவு
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின் அதே எண்ணெயில் சீரகம், மிளகு, கடுகு, வெந்தயம் மற்றும் கொத்தமல்லி சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அதில் எண்ணெய் ஊற்றி கழுவி உலர வைத்த முருங்கை இலைகளை சேர்த்து மிதமான தீயில் வதக்கி எடுத்துகிள்ளவும்.
இதற்கடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து ஆறவைத்து பொருட்களை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் இதில் வதக்கிய முருங்கை இலை மற்றும் ஊறவைத்து புளி சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வானலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்து அரைத்த கலவை, உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
இறுதியாக எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வந்ததும் அடுப்பை அனைத்து இறக்கினால் ஆரோக்கியமான முருங்கை கீரை தொக்கு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |