இரும்புச்சத்தை அதிகரிக்க உதவும் முருங்கைக்கீரை துவையல்.., எப்படி செய்வது?
சத்தான ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல தாதுக்களும் நிறைந்துள்ளன.
அதேபோல், முருங்கைக்கீரை முடி வளர்ச்சியை அதிகரிக்க, நரைமுடி மறைய மற்றும் உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
ஆரோக்கியம் நிறைந்த இந்த முருங்கைக்கீரை ராகி ஆடையை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், சத்தான முருங்கைக்கீரை துவையல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முருங்கைக்கீரை- 2 கைப்பிடி
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடலைப்பருப்பு- 2 ஸ்பூன்
- தனியா- 2 ஸ்பூன்
- சீரகம்- 2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 30
- பூண்டு- 15 பல்
- சிவப்பு மிளகாய்- 6
- புளி- சிறிதளவு
- தக்காளி- 1
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- கறிவேப்பிலை- சிறிதளவு
- உப்பு- 1 தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப்பருப்பு, தனியா மற்றும் சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய், புளி , நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

அடுத்து கழுவி சுத்தம் செய்து வைத்த முருங்கைக்கீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
இதற்கடுத்து அடுப்பை அணைத்து இந்த கலவையை நன்கு ஆறவைக்கவும்.
பின்னர் இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து எடுத்தால் சத்தான முருங்கைக்கீரை துவையல் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |