இரத்தத்தில் ஹிமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? முருங்கை இலை சூப் போதும்
உடலில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படும் போது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் குறைகிறது. இதனால் இரத்த சோகை நோய் வருகிறது.
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க மருத்துவர்களே முருங்கைக்கீரையை பரிந்துரைக்கின்றனர்.
இந்த சத்தான முருங்கைக்கீரை சூப் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முருங்கை கீரை- 1 கைப்பிடி
- பாசி பருப்பு- 2 ஸ்பூன்
- பூண்டு-5
- சின்ன வெங்காயம்- 10
- தக்காளி- 1
- மிளகு-6
- மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- மிளகு தூள்- 1 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
செய்முறை
முருங்கை கீரையை பறித்து சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு குக்கரில் சுத்தம் செய்த முருங்கை கீரை, பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி, மிளகு, மஞ்சள் தூள் சேர்த்து 4-5 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவும்.
பின் குக்கரில் உள்ள கலவையை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
வடிகட்டிய பின் அதில் உள்ள கீரை, பாசிப்பருப்பு போன்றவற்றை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
அரைத்த கலவையையும் வடிகட்டிய தண்ணீரில் வடிகட்டி சேர்த்துக்கொள்ளவும்.
பின் அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவையான அளவு உப்பு, மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கொதிக்கவிட்டால் முருங்கைக்கீரை சூப் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |