உங்களை மீண்டும் அதிரடியாக பார்த்ததில் மகிழ்ச்சி சகோதரா! பாகிஸ்தான் முன்னாள் கேப்டனை புகழ்ந்து தள்ளிய வங்கதேச வீரர்
பாகிஸ்தான் அணி வீரர் சர்ஃப்ராஸ் அகமதை வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் வெகுவாக பாராட்டியுள்ளார்.
மிரட்டிய சர்ஃப்ராஸ் அகமது
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி டிரா செய்தது. இந்த தொடரில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின் சர்ஃப்ராஸ் அகமது விளையாடினார்.
அவர் நான்கு இன்னிங்ஸ்களில் ஒரு சதம், மூன்று அரைசதங்களுடன் 335 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம் 4 இன்னிங்ஸ்களில் அதிக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார்.
@Getty Images
இதற்கு முன் பாகிஸ்தானின் தஸ்லிம் ஆரிஃப் 4 இன்னிங்ஸ்களில் 307 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அதேபோல் இம்தியாஸ் அகமது 9 இன்னிங்ஸ்களில் 344 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
பாராட்டி தள்ளிய முஷ்பிகுர் ரஹிம்
இந்த நிலையில் சர்ஃப்ராஸ் அகமதை வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹிம் பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'மா ஷா அல்லாஹ் ..உங்களை மீண்டும் அதிரடியாக ரன் குவித்ததை பார்த்து மிக்க மகிழ்ச்சி சகோதரா.. தொடர்ந்து வலிமையுடன் இருங்கள்' என தெரிவித்துள்ளார்.
Ma shaa Allah…so happy to see u back in Action and scoring runs brother…keep going strong ?? pic.twitter.com/N2WBPsDeDi
— Mushfiqur Rahim (@mushfiqur15) January 8, 2023
@Reuters