ஊரே மணக்கும் மஷ்ரூம் பிரியாணி செய்ய தெரியுமா?
Mushroom
Healthy Food Recipes
Biriyani
By Kirthiga
பிரியாணி என்றாலே அனைத்து மக்களும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என பலவகைகள் இருந்தாலும் சைவ பிரியர்களுக்கு மஷ்ரூம் பிரியாணி தான் பெஸ்ட்.
அதை எப்படி சுவையாகவும் எளிதாகவும் வீட்டிலேயே செய்யலாம் என்ன இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- பாஸ்மதி அரிசி 2 கப்கள்
-
வெங்காயம் பெரியதாக -2
- தக்காளி -1
- மஷ்ரூம்கள் -1 கப்
- குடை மிளகாய் -1
- இஞ்சி பூண்டு விழுது- 1 மேசைக்கரண்டி
-
பச்சை மிளகாய் -3 அல்லது 4
- புதினா
- கொத்தமல்லி
- எலுமிச்சை- 1/2
-
கரம் மசாலா
- பட்டை 1
- இலவங்கம் - 5
- ஏலக்காய் -2
- பிரிஞ்சி இலை -2
-
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
-
தனியா தூள் -1 தேக்கரண்டி
-
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
-
உப்பு - தேவைக்கேற்ப
- எண்ணெய் -2 மேசைக்கரண்டி
-
தண்ணீர் 4 கப்
செய்முறை
-
முதலில் அரிசியை 15 நிமிடங்கள் ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அடுத்து குக்கரில் எண்ணெய், கரம் மசாலா, லவங்கம் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
-
அதன் பிறகு பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்க்கவும்.
- பிறகு தக்காளி, குடை மிளகாய் மற்றும் மஷ்ரூம், புதினா ஆகியவற்றைச் சேர்க்கவும்.
-
பச்சை வாசணை நீங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் மற்றும் தனியா தூள்களைச் சேர்க்கவும்.
- அடுத்ததாக அரிசியை சேர்த்து உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கிளறவும்.
- அரிசி கலவையில் எழுமிச்சை சாற்றையும் கலக்கவும்.
- இறுதியாக அடுப்பில் இருந்து இறக்கி கொத்தமல்லி இலைகள் சேர்த்து அதனுடன் ரைத்தா வைத்து சாப்பிட்டால், சுவையான மஷ்ரூம் பிரியாணி தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US