அவுஸ்திரேலியாவில் பூஞ்சை உதவியுடன் உருவாக்கப்பட்ட சவப்பெட்டி: ஒரு அரிய தகவல்
Sydney woman becomes first in Australia to be buried in mushroom coffin: சிட்னி நகரைச் சேர்ந்த பெண்ணொருவர், அவுஸ்திரேலியாவிலேயே பூஞ்சையால் உருவாக்கப்பட்ட சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்ட முதல் பெண் என்னும் பெயரைப் பெற்றுள்ளார்.
கடந்த வாரம், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தனது 70 வயதுகளில் உயிரிழந்த கரோலின் என்னும் பெண்ணுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது.
பூஞ்சையால் உருவாக்கப்பட்ட சவப்பெட்டி
சுவாரஸ்யம் என்னவென்றால், அவரை அடக்கம் செய்யப் பயபடுத்தப்பட்ட சவப்பெட்டி, பூஞ்சை ஒன்றின் உதவியால் தயாரிக்கப்பட்டதாகும்.
அதாவது, மைசீலியம் என்னும் பூஞ்சை, வேளாண்மைக் கழிவாகிய சணல் நாருடன் கலக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட சூழலில், தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு சவப்பெட்டியாக உருவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சவப்பெட்டியை லூப் பயோடெக் என்னும் நிறுவன் உருவாக்கியுள்ளது.
இந்த சவப்பெட்டியின் சிறப்பம்சம் என்னவென்றால், வழக்கமான மரத்தாலான சவெப்பெட்டிகள் மட்கி மண்ணுடன் மண்ணாக 50 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்த பூஞ்சை சவப்பெட்டி மட்க 45 நாட்கள் மட்டுமே ஆகும்.
அத்துடன், அது மண்ணை மாசுபடுத்துவதற்கு பதில், மண்ணை வளமுள்ளதாக மாற்றும்.
விடயம் என்னவென்றால், பல நாடுகளில் இறந்தவர்களை அடக்கம் செய்வது கடினமான விடயமாகிவருகிறது.
தகனம் செய்யும் முறையை பலரும் பின்பற்றத் துவங்கியுள்ளார்கள் என்றாலும், அதனால், காற்று மாசு அதிகம். நீரைப் பயன்படுத்தி தகனம் செய்யும் சில முறைகள் உள்ளன. ஆனால், அவை செயல்படும் முறை, மக்களை கொஞ்சம் யோசிக்கவைக்கக்கூடும்.
இப்படிப்பட்ட சுழலில், இந்த பூஞ்சை சவப்பெட்டி முறை இயற்கையுடன் இணைந்து, சுற்றுச்சுழலுக்கும் உகந்ததாக உள்ளதால் வரவேற்பை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது