இறைச்சி கறியை மிஞ்சும் சுவையில் காளான் கறி செய்வது எப்படி?
பொதுவாகவே அனைவருக்கும் சுவையாக சமைத்து சாப்பிடுவதில் அதிக ஆசை இருக்கும்.
அதிலும் சைவ பிரியர்களுக்கு காளான் கறி என்றால் மிகவும் பிடிக்கும்.
அந்தவகையில் இந்த பதிவில் இறைச்சி சுவையை மிஞ்சும் வகையில் காளான் கறி எப்படி செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- காளான் - 600 கிராம்
- எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
- பட்டை
- கிராம்பு
- ஏலக்காய்
- ஷாஹி ஜீரா - 1தேக்கரண்டி
- வெங்காயம் - 2 நறுக்கியது
- பச்சை மிளகாய் - 5 நறுக்கியது
- இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- தக்காளி விழுது - 6 பழம்
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- சீரக தூள் - 2 தேக்கரண்டி
- தனியா தூள் - 2 தேக்கரண்டி
- கஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
- உப்பு
- தண்ணீர் - 1 1/2 கப்
- கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
1. காளானை நறுக்கி வைத்து கொள்ளவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஷாஹி ஜீரா சேர்க்கவும்.
3. அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 2 நிமிடத்திற்கு பிறகு தக்காளி விழுது சேர்த்து மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரை வதக்கவும்.
5. அடுத்து உப்பு, மஞ்சள் தூள், சீரக தூள், தனியா தூள், கஷ்மீரி மிளகாய் தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
6. பின்பு நறுக்கிய காளானை சேர்த்து கலந்து விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
7. பிறகு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு 10 நிமிடம் வேகவிடவும்.
8. அடுத்து கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து விட்டு 3 நிமிடம் சிம்மில் வேகவிடவும்.
9. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து எடுத்தால் சுவையான காளான் கறி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |