கறி சுவையை மிஞ்சும் காளான் நெய் வறுவல்.., எப்படி செய்வது?
காளான் மிளகு மசாலா தோசை, இட்லி, சப்பாத்தி , பூரி என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.
அந்தவகையில், கறி சுவையை மிஞ்சும் வகையில் சுவையான காளான் மிளகு மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- காய்ந்த மிளகாய்- 10
- முந்திரி- 20
- தனியா- 3 ஸ்பூன்
- சோம்பு- 1½ ஸ்பூன்
- வெந்தயம்- ¼ ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- பூண்டு- 12
- வெல்லம்- ¼ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- புளி- எலுமிச்சை அளவு
- நெய்- 2 ஸ்பூன்
- காளான்- ½ kg
- கறிவேப்பிலை- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், முந்திரி, தனியா, சோம்பு, வெந்தயம், சீரகம், பூண்டு, வெல்லம், உப்பு, ஊறவைத்த புளி சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் நெய் சேர்த்து அதில் சோம்பு போட்டு தாளித்து அரைத்த மசாலா சேர்த்து நெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
அடுத்து அதில் சுத்தம் செய்த காளான் சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு சுண்டும் வரை வதக்கவும்.
இறுதியில், நெய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான காளான் நெய் வறுவல் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |