செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு செய்வது எப்படி?
Tomato
Mushroom
Onion
By Kirthiga
பொதுவாகவே அனைவருக்கும் சுவையாக சமைத்து சாப்பிடுவதில் அதிக ஆசை இருக்கும். அதிலும் சைவ பிரியர்களுக்கு காளான் கறி என்றால் மிகவும் பிடிக்கும்.
புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் அதிகமாக உள்ளன.
ஆகவே அந்தவகையில் செட்டிநாடு ஸ்டைல் குழம்பு வைப்பது எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
காளான் - 300 கிராம்
- வெங்காயம் - 2
-
தக்காளி - 2
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- கொத்துமல்லி விதை(தனியா) - 1 ஸ்பூன்
-
சீரகம் - 3/4 ஸ்பூன்
-
சோம்பு - 1/2 ஸ்பூன்
- பட்டை- 2 இன்ச் துண்டு
-
கிராம்பு - 2
- ஏலக்காய் - 2
- காய்ந்த மிளகாய் - 5
- தேங்காய் - கால் மூடி
- எண்ணெய்
-
உப்பு
- கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை
செய்முறை
-
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தனியா, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- அடுத்து தக்காளி சேர்த்து தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி ஆறவைக்கவும். பின் மிக்சியில் அரைத்து எடுக்கவும்.
- அடுத்து வேறு ஒரு பாத்திரத்தில் கடுகு வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் அரைத்த மசாலா, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- இறுதியாக காளான் துண்டுகளை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
- அடுப்பில் இருந்து இறக்கும் போது, கொத்துமல்லி இலை தூவலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US