வெறும் 15 நிமிடத்திலேயே காளான் குழம்பு செய்து எப்படி?
Mushroom
Onion
Healthy Food Recipes
By Kirthiga
காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன.
அதோடு கூட அவை நிறைந்த அளவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன.
புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன.
அத்தகைய காளானில் குழம்பு வைப்பது எப்படி வைப்பது என்று தெரிந்துக்கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படிக்கவும்.
தேவையான பொருட்கள்
- காளான் - 300 கிராம்
- வெங்காயம் - 2
- தக்காளி - 2
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
- கொத்துமல்லி விதை(தனியா) - 1 ஸ்பூன்
- சீரகம் - 3/4 ஸ்பூன்
- சோம்பு - 1/2 ஸ்பூன்
- பட்டை- 2 துண்டு
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 2
- காய்ந்த மிளகாய் - 5
- தேங்காய் - கால் மூடி
- எண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்துமல்லி இலை
செய்முறை
-
முதலில் ஒரு வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தனியா, சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் போட்டு பொரிந்ததும் வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
-
அடுத்து அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். பின் தேங்காயும் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.
- வதக்கி எடுத்தவற்றை ஆறியதும் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
காளானை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
-
எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
-
அதில் அரைத்த மசாலா, மஞ்சள்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
-
குழம்பு நன்றாக கொதி வந்ததும், காளான் துண்டுகளை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு சில நிமிடங்களில் எடுத்தால் சுவையான காளான் குழம்பு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US