கறி சுவையை மிஞ்சும் வகையில் காளான் மிளகு மாசலா: இப்படி செஞ்சி அசத்துங்க
இந்த சுவையான காளான் மிளகு மசாலா தோசை, இட்லி, சப்பாத்தி , பூரி என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.
மாதத்திற்கு இரண்டு முறை காளான்களை உணவில் எடுத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் இது புரதத்தின் சிறந்த மூலமாகும்.
கறி சுவையை மிஞ்சும் வகையில் சுவையான காளான் மிளகு மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை எண்ணெய்- 6 ஸ்பூன்
- வெங்காயம்- 4
- மிளகு- 3 ஸ்பூன்
- சோம்பு- 1 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- தக்காளி- 3
- மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மல்லித்தூள்- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- கருவேப்பிலை- 1 கொத்து
- காளான்- 15
செய்முறை
முதலில் ஒரு வாணலில் கடலை எண்ணெய் சேர்த்து அதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
தொடர்ந்து அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
பின் அதில் கருவேப்பிலை சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்ததும் அதில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள காளான் சேர்த்து கிளறவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு மற்றும் சோம்பு சேர்த்து பொடியாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
காளான் நன்கு வெந்து வந்ததும் அதில் அரைத்து வைத்த மிளகு சோம்பு பொடி சேர்த்து இறக்கினால் சுவையான காளான் மிளகு மசாலா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |