நச்சு காளானால் 4 முறை முன்னாள் கணவரை கொல்ல முயன்ற பெண்: வெளிவரும் புதிய பின்னணி
அவுஸ்திரேலியாவில் நச்சு காளான் உணவால் உறவினர்கள் மூவரை கொலை செய்த பெண் தொடர்பில் பொலிசார் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
மூன்று கொலை வழக்கு
தொடர்புடைய 49 வயதான Erin Patterson என்பவர் மீது மூன்று கொலை வழக்கு மற்றும் 5 கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது.
@ap
விக்டோரியா மாகாணத்தில் லியோங்காதா நகரில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஜூலை மாதம் அவர் அளித்த குடும்ப மதிய உணவில் நச்சு காளான் கலந்ததாக உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே, அவர் மீது மூன்று கொலைக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான அவர் மீதான வழக்கை மே 3ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர். இந்த நிலையில், 2021 நவம்பர் முதல் 2022 செப்டம்பர் வரையில், தமது முன்னாள் கணவரை மூன்று முறை கொலை செய்ய முயன்றதும் பொலிஸ் ஆவணங்களில் பதிவாகியுள்ளது.
மிக ஆபத்தான காளான்
நான்காவது முறையாக கணவரை கொல்ல திட்டமிட்டு ஏற்பாடு செய்த விருந்தில் கலந்து கொண்ட நால்வர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட, அதில் மூவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.
அந்த விருந்தில் அவரது முன்னாள் கணவர் கலந்துகொள்ளவில்லை. பொலிஸ் விசாரணையில், அந்த நால்வரும் மிக ஆபத்தான காளான் உணவை எடுத்துக்கொண்டதாகவும்,
ஆனால் அன்றைய நாள் விருந்தில் கலந்துகொண்ட Erin Patterson மற்றும் அவரது இரு பிள்ளைகளும் எந்த பாதிப்பும் இன்றி தப்பினர். இதுவே பொலிசாருக்கு Erin Patterson மீது சந்தேகம் எழ காரணமாக அமைந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |