நாவூறும் சுவையில் காளான் சூப்.., இலகுவாக செய்வது எப்படி?
காளான் சூப்பை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இருக்கும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் காளான் சூப் இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- காளான்- 1 கப்
- வெண்ணெய்- 2 ஸ்பூன்
- பூண்டு- 5 பல்
- சின்ன வெங்காயம்- 5
- மிளகுத்தூள்- 1 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
- சோளமாவு- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து உருக்கிக் கொள்ளவும்.
பின் இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் காளானை நன்கு கழுவி சிறிது சிறிதாக நறுக்கி அதில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
இதற்கடுத்து அதில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி காளானை வேக வைத்துக்கொள்ளவும்.
அடுத்து இதில் சிறிதளவு காளானை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து அதில் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
இறுதியாக சோள மாவை தண்ணீரில் கலந்து அதில் சேர்த்து கொதித்ததும் மிளகுத் தூள், கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் காளான் சூப் ரெடி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |