பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்: சோகத்தில் திரையுலகம்
Music director deva passed away: பிரபல இசையமைப்பாளர் தேவா தனது 75 வயதில் காலமானார்.
தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளரான தேவா உடல்நலக்குறைவினால் தனது 75 வயதில் காலமானார்.
இசையமைப்பாளர் தேவா
பிரபல இசையமைப்பாளர் தேவா சமீபத்தில் உடல்நலக்குறைவினால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தேவா (75), சுமார் 8.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
1986ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான தேவா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
தேனிசை தென்றல்
கானா பாடல்களை தனது இசையில் கொடுத்து பிரபலமானவராக இருந்தபோதிலும், 'தேனிசை தென்றல்' என்ற பட்டத்தை தேவா கொண்டிருந்தார். அத்துடன் பல்வேறு பாடல்களை குரலில் பாடியிருக்கிறார்.

சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநில விருது, கலைமாமணி, ஃப்லிம் பேர் உள்ளிட்ட விருதுகளை தேவா பெற்றிருக்கிறார்.
திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை வைத்திருந்த தேவாவின் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் என பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
