மைக்கேல் ஜாக்சனுடன் பணியாற்றிய பிரபலம் 91 வயதில் காலமானார்: மகளுக்கு அனுப்பிய இறுதி செய்தி
அமெரிக்காவில் பிரபல தயாரிப்பாளர் குயின்ஸி ஜோன்ஸ் தனது 91வது வயதில் காலமானார்.
குயின்ஸி ஜோன்ஸ்
சிகாகோவில் 1933ஆம் ஆண்டு பிறந்தவர் குயின்ஸி ஜோன்ஸ் (Quincy Jones). இவர் மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து பல பாடல்களை எழுதியுள்ளார்.
அவற்றில் திரில்லர் (1982) மற்றும் Bad (1987) ஆகியவை மிகவும் பிரபலமானவை. திரில்லர் 65 மில்லியன் பிரதிகள் விற்று, மிக அதிகளவில் விற்பனையான ஆல்பம் ஆக சாதனை படைத்தது.
இவர் ஹாலிவுட் இசை தயாரிப்பாளர், வடிமைப்பாளர், திரைப்பட மற்றும் தொலைகாட்சி தொடர் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.
28 முறை கிராமி விருதுகள்
குயின்ஸி ஜோன்ஸ், தனது 70 ஆண்டுகால கலையுலக வாழ்வில் 28 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். அதிலும் குறிப்பாக Grammy Legend Awardஐ 1992யில் பெற்றார்.
இந்த நிலையில் குயின்ஸி ஜோன்ஸ் தனது 91வது வயதில் காலமானார். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்ததாக அவரின் விளம்பரதாரர் தெரிவித்தார்.
ஜோன்ஸ் இறப்பதற்கு முன்பு கடைசியாக தனது மகள் மார்டினாவுக்கு இன்ஸ்டாகிராமில் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.
அதில் அவர் 'எனது டீனா பீனாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! உன்னை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்! உன்னை நான் பெரிய அரவணைப்புடன் நித்தியமாக நேசிக்கிறேன்' என குறிப்பிட்டிருந்தார்.
குயின்ஸி ஜோன்ஸின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |