ஜேர்மனியில் கோவிட் தடுப்பூசியால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோர்: எலான் மஸ்கின் ஆதரவு செய்தி
கோவிட் தடுப்பூசியால் ஜேர்மனியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததாக கூறப்படும் ஒரு செய்தி கவனம் ஈர்த்துவருகிறது.
இந்நிலையில், கோடீஸ்வரரான எலான் மஸ்கும் அந்த செய்தியை ஆதரிக்கும் வகையில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
தடுப்பூசியால் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோர்
கோவிட் என்றொரு தொற்று கண்டுபிடிக்கப்பட்டு, அது வேகமாக பரவிவருகிறது என்பது தெரிந்ததுமே, அதை எப்படியாவது கட்டுப்படுத்த பல நாடுகளின் அரசாங்கங்கள் முயற்சிகளைத் துவக்கின.
பல நிறுவனங்கள் வேகமாக செயல்பட்டு கோவிடுக்கு எதிரான தடுப்பூசிகளைக் கண்டுபிடித்தன.

கோவிட் தடுப்பூசியால் கோவிட் தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
அதே நேரத்தில் கோவிட் தடுப்பூசி பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துவது தெரியவந்தது.
நடைமுறையில், கோவிட் தடுப்பூசி பெற்ற பலர் தங்கள் உடல் வலு குறைந்துவிட்டதுபோல் உணர்வதாகக் கூறுவதை நீங்களும் கேட்டிருக்கலாம்.
சில நாடுகளில், பிள்ளை பெறும் வயதிலிருக்கும் பெண்கள், மூளையில் இரத்தக்கசிவு பிரச்சினையால் பாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், பல நாடுகளில், கோவிட் தடுப்பூசி பெற்றவர்களிடையே குழந்தை பிறக்கும் வீதமும் குறைந்துள்ளதாக Dr Helmut Sterz என்னும் நச்சு இயல் நிபுணர் தெரிவித்துள்ளார்.
ஃபைசர் (Pfizer) நிறுவனத்தில் நச்சியல் நிபுணராக பணியாற்றியவரான இந்த Dr Helmut Sterz, ஜேர்மனியில் கோவிட் தடுப்பூசியால் 60,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறியிருந்தார்.
எலான் மஸ்கின் ஆதரவு செய்தி
இந்நிலையில், Dr Helmut Sterzஇன் செய்தி தொடர்பில் பீற்றர் ஸ்வீடன் என்பவர் சமூக ஊடகமான எக்ஸில் ஒரு இடுகையை வெளியிட்டிருந்தார்.
அவர் வெளியிட்டிருந்த செய்தியில், ஃபைசர் நிறுவன நச்சியல் நிபுணரான Dr Helmut Sterz, ஜேர்மனியில் கோவிட் தடுப்பூசியால் 60,000 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

இந்த செய்தி எல்லா இடங்களிலும் தலைப்புச் செய்தியாகியிருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
பீற்றரின் செய்தியை ஆதரிக்கும் வகையில், எக்ஸின் உரிமையாளரான எலான் மஸ்கும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
The vaccine dosage was obviously too high and done too many times.
— Elon Musk (@elonmusk) April 12, 2026
I had the original Wuhan virus before there was any vaccine and it was much like any other cold/flu. Bad, but not terrible.
But my second vaccine shot almost sent me to the hospital. Felt like I was dying. https://t.co/rFuUpzBkKH
அந்த செய்தியில், தானும் கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற்றபோது கிட்டத்தட்ட மரணம் ஏற்படுவதுபோல உணர்ந்ததாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையை அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டதால், சில கோவிட் தடுப்பூசிகள் சோதனை முறையில் பயன்படுத்தப்படாமலே, நேரடியாகவே மக்களுக்குக் கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |