அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப்... உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மாறும் இன்னொருவர்
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்பை மக்கள் தெரிவு செய்துள்ள நிலையில், உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக எலோன் மஸ்க் மாறவிருக்கிறார் என்றே தகவல் கசிந்துள்ளது.
வெளிப்படையாக ட்ரம்புக்கு ஆதரவு
உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலோன் மஸ்க், இந்த ஜனாதிபதி தேர்தலில் வெளிப்படையாக ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், கடும் போட்டி மிகுந்த மாகாணங்களில் தீவிர பரப்புரையிலும் களமிறங்கினார்.
அத்துடன், ஜனநாயகம் காப்போம் என்ற தமது இணையமூடாக முன்னெடுக்கப்பட்ட அறப்போரில் கலந்துகொள்பவர்களில் தினசரி ஒருவருக்கு 1 மில்லியன் டொலர் பரிசும் வழங்கினார்.
உண்மையில் ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்றால், அவரது துணை நிழல் ஜனாதிபதியாக எலோன் மஸ்க் இருப்பார் என்றே பரவலாக பேசப்பட்டது. குடியரசுக் கட்சிக்கு மிக அதிக தேர்தல் நன்கொடை வழங்கியவர் மட்டுமின்றி, தேர்தல் பரப்புரைக்காக பல மில்லியன் டொலர்கள் தொகையை வெள்ளமாக செலவழித்துள்ளார் எலோன் மஸ்க்.
இது அனைத்தும் டொனால்டு ட்ரம்பின் ஆட்சியில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக மாறுவதற்கான படிக்கட்டு என்றே கூறப்படுகிறது. பிரித்தானிய அரசியல் நிபுணர் ஒருவர் தெரிவிக்கையில்,
மஸ்குக்கு சிறப்பு பதவி
பெரும் கோடீஸ்வரரான எலோன் மஸ்க் தொழில் மற்றும் அரசியலில் சக்திவாய்ந்தவராக மாற முயல்கிறார் என்றே குறிப்பிட்டுள்ளார். நீங்கள் என்ன செய்தாலும் உங்களுக்கு உந்துதலைக் கொடுக்கத் தயாராக இருக்கும் ஒரு நண்பரை ஜனாதிபதியாகப் பெறுவீர்கள் என்றால்,
அது வணிகத்திலும் அரசியல் உலகிலும் உங்களுக்கு மிகப்பெரிய சக்தியைத் தரும் என குறிப்பிட்டுள்ளார் Dr Alan Mendoza. இப்படியான ஒரு வாய்ப்புக்காகவே, எலோன் மஸ்க் தமது மொத்த உழைப்பையும் செலவிடுகிறார்.
மட்டுமின்றி, ஆட்சியை சிறப்பாக முன்னெடுக்க எலோன் மஸ்கின் ஆதரவை டொனால்டு ட்ரம்ப் ஏற்கனவே கோரியிருந்தார். சிறப்பு பதவி ஒன்றும் எலோன் மஸ்குக்கு வழங்க ட்ரம்ப் உறுதி அளித்திருந்தார்.
செப்டம்பர் இறுதி வரை மூன்று மாதங்களில் மட்டும் ட்ரம்பின் தேர்தல் வெற்றிக்காக இந்திய மதிப்பில் சுமார் ரூ 1096 கோடி அளவுக்கு எலோன் மஸ்க் செலவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |