எலான் மஸ்க்கின் 8 டொலர் கட்டணத்தை ஆதரிக்கும் இந்திய வம்சாவளி ஆலோசகர்! கூறும் 4 காரணங்கள்
எலான் மஸ்க்கின் இந்திய வம்சாவளி ஆலோசகர் ட்விட்டரின் 8 டொலர் கட்டணத்தை ஆதரிக்கிறார்.
அதற்கு அவர் நான்கு காரணங்களைக் கூறுகிறார்.
புளூ டிக் சரிபார்ப்பிற்காக மாதம் ஒன்றுக்கு 8 டொலர் கட்டணத்தை அறிமுகப்படுத்தியதற்காக ட்விட்டரின் புதிய முதலாளி எலான் மஸ்க் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.
கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும், மஸ்க் இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய மறுத்துவிட்டார். மேலும், ட்விட்டரில் bots மற்றும் ட்ரோல்களையும் முறியடிப்பதற்கான ஒரே வழி இதுதான் என்று அவர் கூறினார்.
இப்போது, அவரது இந்திய வம்சாவளி ஆலோசகர் ஸ்ரீராம் கிருஷ்ணனும் (Sriram Krishnan) சந்தா சேவையை ஆதரித்துள்ளார், அதே நேரத்தில் சரிபார்ப்பிற்கான தற்போதைய அமைப்பில் உள்ள சில குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறார்.
ஸ்ரீராம் கிருஷ்ணன் பதிவிட்ட தொடர்ச்சியான ட்வீட்களில், பணம் செலுத்திய சரிபார்ப்பு பற்றிய பல விமர்சனங்கள் தர்க்கரீதியாக முரணாக உள்ளன என்று கூறினார்.
இந்த மாதச் சந்தா, ட்விட்டர் தளத்தில் ஆள்மாறாட்டம் செய்வதை குறைக்கும் என்ற அவரது கூற்றை ஆதரிக்க நான்கு காரணங்களை அவர் பட்டியலிட்டார்.
சிசி/மொபைல் செக் அவுட்டைப் பயன்படுத்துவது வசைபாடுதலை அதிகரிக்கிறது, மேலும் ஆள்மாறாட்டம் செய்வதில் சிக்கிய அனைவரும் தங்கள் பணத்தை இழக்க நேரிடும் என்று அவர் கூறினார். இதனை எலான் மஸ்கும் முன்பே கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், சரிபார்க்கப்பட வேண்டியவர்கள் மற்றும் சரிபார்க்கப்படாமல் நிறைய பேர் உள்ளனர். அதேபோல், அவசியமே இல்லமால் சரிபார்க்கப்பட்ட பலர் உள்ளனர்.
இந்நிலையில், ட்விட்டரில் இப்போது இருக்கும் அமைப்பு எளிதாக தவறாக பயன்படுத்தக்கூடியதாக உள்ளது என்றும், இந்த 8 டொலர் சந்தா அவசியமற்றவர்களை தானாக ஒதுங்கச்செய்யும் என்று அவர் நம்புகிறார்.
2. there are lots of people who should be verified ( and often impersonated) and aren’t. And vice versa.
— Sriram Krishnan - sriramk.eth (@sriramk) November 6, 2022
The current path on any social network is opaque and easily gamed.
$8 gives a consistent path for anyone regardless of their level of notability ( which is subjective).
தற்போதைய மாடலில் கடுமையான ஸ்பேம் சிக்கல்கள் உள்ளன என்று கிருஷ்ணன் கூறினார். ஏத்துக்கட்டுக்கு, அவர் @VitalikButerin அல்லது @elonmusk கணக்குகளில் ஏதேனும் பதிலைப் பார்த்தால், அங்கு ஹேக் செய்யப்பட்ட ப்ளூ டிக் கணக்குகளை மக்கள் பார்க்கலாம் என குறிப்பிட்டார். 8 டொலர்களில் சரிபார்க்கப்பட்டு கணக்குகளை வழங்குவது அந்த தாக்குதல்களின் மதிப்பைக் குறைக்கிறது என்று தொழில்நுட்ப வல்லுநர் கூறினார்.
நான்காவதாக அவர் முன்வைக்கும் கருத்து, "இறுதியாக, சமூக ஊடகங்களில் சரிபார்ப்பு என்பது அவர்கள் யார் என்று தங்களை கட்டிக்கொள்வதற்காகத் தான் இருந்தது. "இந்த நபரை குறிப்பிடத்தக்கவர் என்று நாங்கள் தீர்மானிக்கிறோம்" என்று கூறுவதற்காக அல்ல" என்று கிருஷ்ணன் கூறினார்.
மேலும், புதிய ட்விட்டரின் எந்தவொரு வெளியீட்டிலும் முன்னேற்றம் மற்றும் மாற்றங்களுக்கு இடமிருக்கும் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாக கூறினார்.
4. Finally, verification on social media was originally meant to solve for “this person is who they say they are”. It was NOT meant to say “we judge this person to be notable”.
— Sriram Krishnan - sriramk.eth (@sriramk) November 6, 2022
This brings it back to the original spirit of the design. No more DMing employees for a favor.