அவரை புறக்கணியுங்கள்... தேர்தலுக்கு தயாராகும் ஜேர்மன் மக்களுக்கு எலோன் மஸ்க் கோரிக்கை

Elon Musk Olaf Scholz
By Arbin Jan 12, 2025 06:14 PM GMT
Report

ஜேர்மன் மக்கள் சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டாம் என டெஸ்லா நிறுவனரான எலோன் மஸ்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களுக்கு வேண்டுகோள்

ஜேர்மனியில் பிப்ரவரி 23ம் திகதி நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் ஆளும் SPD கட்சி சார்பாக மீண்டும் சேன்சலர் ஓலாஃப் ஷோல்ஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே எலோன் மஸ்க் ஜேர்மன் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரை புறக்கணியுங்கள்... தேர்தலுக்கு தயாராகும் ஜேர்மன் மக்களுக்கு எலோன் மஸ்க் கோரிக்கை | Musk Message To Germany Before Snap Polls

ஜேர்மன் மொழியில் Sag Nein zu Scholz! என தமது சமூக ஊடக பக்கத்தில் எலோன் மஸ்க் பதிவிட்டுள்ளார். டிசம்பர் மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஷோல்ஸ் அரசாங்கம் தோல்வியடைந்ததை அடுத்து, ஜேர்மனியில் புதிய நாடாளுமன்றத்திற்கான திடீர் தேர்தல் பிப்ரவரி 23 அன்று நடைபெற உள்ளது.

ஜேர்மனியில் செயல்பட்டுவரும் தீவிர வலதுசாரி கட்சியான AfDக்கு எலோன் மஸ்க் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளார். AfD கட்சியின் தலைவர்களில் ஒருவரான Alice Weidel-ஐ புகழ்ந்துள்ள எலோன் மஸ்க், ஜேர்மன் மக்கள் கண்டிப்பாக AfD கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

காப்பாற்ற முடியும்

AfD கட்சியால் மட்டுமே ஜேர்மனியை காப்பாற்ற முடியும் என உறுதிபட தெரிவித்துள்ள எலோன் மஸ்க், மக்கள் கண்டிப்பாக AfD கட்சியின் பின்னால் திரள வேண்டும் என்றும், இல்லையெனில் ஜேர்மனி மிக மோசமான விளைவுகளை சந்திப்பது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.

அவரை புறக்கணியுங்கள்... தேர்தலுக்கு தயாராகும் ஜேர்மன் மக்களுக்கு எலோன் மஸ்க் கோரிக்கை | Musk Message To Germany Before Snap Polls

மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றும், அவ்வாறு மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்களுக்கு AfD கட்சியை தாம் பரிந்துரைப்பதாகவும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.  ஆனால், AfD கட்சியை எலோன் மஸ்க் வெளிப்படையாக ஆதரித்த விவகாரம் ஜேர்மனியில் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியது.

நாட்டின் வரவிருக்கும் தேர்தலில் எலோன் மஸ்க் தலையிடுவதாக ஜேர்மன் அரசாங்கம் குற்றம் சாட்டியது. பல்வேறு தலைவர்கள் எலோன் மஸ்கின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து... ஸ்தம்பிக்கும் விமான நிலையங்கள்

ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து... ஸ்தம்பிக்கும் விமான நிலையங்கள்

மட்டுமின்றி, தீவிர வலதுசாரிகளை ஆதரப்பதன் ஊடாக ஐரோப்பாவை பலவீனப்படுத்த எலோன் மஸ்க் திட்டமிடுவதாகவும் ஜேர்மனி குற்றஞ்சாட்டியது. ஜேர்மனியை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை தங்களின் கொள்கைகளில் ஒன்றாக கொண்டுள்ளது AfD கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US