சட்டவிரோதமாக குடியேறினால் விலங்கிட்டு அனுப்பப்படுவீர்கள்! வீடியோ மூலம் எச்சரித்த அமெரிக்கா
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வீடியோ ஒன்றை பகிர்ந்து சட்டவிரோதமாக குடியேற நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ட்ரம்பின் நடவடிக்கை
டொனால்ட் ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையாக சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியர்களை விலங்கிட்டு அழைத்து வந்தது பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, அதுபோல் அல்லாமல் அனுப்பிவைக்க வேண்டும் என இந்திய அரசு கூறியது.
ASMR: Illegal Alien Deportation Flight 🔊 pic.twitter.com/O6L1iYt9b4
— The White House (@WhiteHouse) February 18, 2025
கை, கால்களில் விலங்கிடப்பட்டு
இந்த நிலையில் வெள்ளை மாளிகை சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.

பிரதமர் மோடி மீது மரியாதை உள்ளது.,ஆனால் வாக்குசதவீதத்தை உயர்த்த 21 மில்லியன் தர வேண்டுமா? டொனால்ட் ட்ரம்ப்
அதில் சட்டவிரோத குடியேறிகளின் கை, கால்களில் விலங்கிடப்பட்டு விமானத்தில் ஏற்றப்படுகின்றனர்.
இந்த வீடியோவுக்கு டெஸ்ட் நிறுவனர் சிரிக்கும்படியாக 'ஹாஹா' என குறிப்பிட்டு வாவ் என ரியாக்ட் செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |