குடியரசுக் கட்சியினருக்காக மில்லியன் கணக்கில் செலவிட்ட எலான் மஸ்க்... மூவர் மட்டுமே வெற்றி

Elon Musk Election
By Arbin Nov 05, 2026 06:24 PM GMT
Report

Just three of 43 House Republicans Musk backed win, while 33 lose: மஸ்க் ஆதரித்த 43 குடியரசுக் கட்சி பிரதிநிதிகளில் மூவர் மட்டுமே வெற்றி, அதே நேரத்தில் 33 பேர் தோல்வியடைந்தனர்.

எலான் மஸ்க் அமெரிக்க இடைத்தேர்தலுக்காக கிட்டத்தட்ட அரை பில்லியன் டொலர்களைச் செலவிட்டார், ஆனால் இந்த சாதனை அளவிலான செலவினம் உலகின் மிகப் பெரிய பணக்காரருக்குக் குறைந்த பலனையே அளித்துள்ளது.

33 பேர் தோல்வி

பிரதிநிதிகள் சபைக்காக மஸ்க் ஆதரித்த 43 குடியரசுக் கட்சியினரில், 33 பேர் தோல்வியடைந்த நிலையில், மூவர் மட்டுமே செவ்வாய்க்கிழமை இரவு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றனர்.

குடியரசுக் கட்சியினருக்காக மில்லியன் கணக்கில் செலவிட்ட எலான் மஸ்க்... மூவர் மட்டுமே வெற்றி | Musk Record Spending On Republicans

புதன்கிழமை பிற்பகல் வரை எஞ்சிய ஏழு தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இதுவரை பதிவான வாக்கு எண்ணிக்கையில் ஜனநாயகக் கட்சியினர் முன்னிலை வகிக்கின்றனர்.

மஸ்க் ஆதரவளித்த ஏழு குடியரசுக் கட்சி செனட் வேட்பாளர்களில், ஆறு பேர் தோல்வியடைந்தனர்; ஒரு தொகுதிக்கான தேர்தல் முடிவு இன்னும் தெரியவரவில்லை.

அந்த ஒரு தொகுதியான அலாஸ்காவில், 77 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஜனநாயகக் கட்சியின் மேரி பெல்டோலா மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

ஹொங்ஹொங் ஆர்வலருக்கு இரண்டாவது சிறைத்தண்டனை... பிரித்தானியா கடும் கண்டனம்

ஹொங்ஹொங் ஆர்வலருக்கு இரண்டாவது சிறைத்தண்டனை... பிரித்தானியா கடும் கண்டனம்

SpaceX மற்றும் Tesla நிறுவனங்களின் தலைமையகம் அமைந்துள்ள, மஸ்க் சிப் தயாரிப்புத் திட்டமொன்றைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதுமான டெக்சாஸில், செனட் தேர்தலில் சுமார் 230 மில்லியன் டொலர்களையும், ஆளுநர் தேர்தலில் 5 மில்லியன் டொலர்களையும், துணை ஆளுநர் தேர்தலில் 500,000 டொலர்களையும் செலவிட்டும், மஸ்க்கிற்கு எந்த வெற்றியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள நாடாளுமன்றம், மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் சேவை மற்றும் அவரது செயற்கை நுண்ணறிவு தரவு மையத் திட்டங்கள் மீதான கண்காணிப்பைக் கடுமையாக்கும் என்ற முதலீட்டாளர்களின் கவலைகளின் காரணமாக, புதன்கிழமையன்று SpaceX மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் பங்குகள் முறையே 3.9 சதவீதம் மற்றும் 3.3 சதவீதம் சரிந்தன.

மேலும், இந்தத் தேர்தல் காலத்தில் செலவினங்களை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்ல உதவிய மஸ்க்கின் மிகப்பெரிய நன்கொடைகள், ஜனநாயகக் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன; மஸ்க் மற்றும் அவரது வணிகங்கள் மீதான விசாரணைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல மில்லியன்களை

தங்களுக்குக் கிடைத்துள்ள புதிய அதிகாரத்தைக் கொண்டு, தேர்தல் நிதிச் சீர்திருத்தத்தையும் தங்கள் விருப்பப் பட்டியலில் சேர்த்துக் கொள்வதாக ஜனநாயகக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

குடியரசுக் கட்சியினருக்காக மில்லியன் கணக்கில் செலவிட்ட எலான் மஸ்க்... மூவர் மட்டுமே வெற்றி | Musk Record Spending On Republicans

கட்சி சார்பற்ற தேர்தல் நிதி கண்காணிப்பு அமைப்பான ஓபன்சீக்ரெட்ஸின் கூற்றுப்படி, மஸ்க் ஃபெடரல் தேர்தல்களுக்காக மட்டும் 445 மில்லியன் டொலர்களைச் செலவழித்துள்ளார்.

அவருடைய பணத்தின் முழுமையான வீச்சு ஒருவேளை ஒருபோதும் வெளிப்படாமல் போகலாம். அரசியல் நடவடிக்கைக் குழுக்களைப் போலத் தங்கள் நன்கொடையாளர்களைப் பற்றி குறைவாக வெளிப்படுத்தும் 'டார்க் மணி' இலாப நோக்கற்ற குழுக்கள் மூலம் அவர் மேலும் பல மில்லியன் டொலர்களைச் செலவழித்துள்ளார் என்றும்,

சீரான வெளிப்படுத்தல் விதிகள் இல்லாத மாகாண மற்றும் உள்ளூர் தேர்தல்களில் மேலும் பல மில்லியன்களைச் செலவழித்துள்ளார் என்றும் அவரது தேர்தல் பிரச்சாரச் செலவுகள் குறித்து அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

செல்வந்த தனிநபர்கள் மற்றும் பெருநிறுவனங்களிடமிருந்து வரம்பற்ற நன்கொடைகளைப் பெற்று, பெரிய கட்டுப்பாடுகள் ஏதுமின்றி பிரச்சாரங்களில் செலவு செய்யக்கூடிய சூப்பர் PAC-களின் எழுச்சியால், சமீபத்திய தேர்தல்களில் செலவினங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன.

விசாரணைகள் தொடங்கிவிட்டன

அரசியல் விளம்பரங்களைக் கண்காணிக்கும் 'AdImpact' அமைப்பின் தகவல்படி, டெக்சாஸ் செனட் தேர்தல் போட்டியானது, அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் அல்லாத தேர்தல்களிலேயே மிகவும் அதிக செலவு செய்யப்பட்ட தேர்தலாக அமைந்தது; இதில் மொத்தம் சுமார் 573.2 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

குடியரசுக் கட்சியினருக்காக மில்லியன் கணக்கில் செலவிட்ட எலான் மஸ்க்... மூவர் மட்டுமே வெற்றி | Musk Record Spending On Republicans

ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள், குடியரசுக் கட்சியினரை விட சிறு தொகை நன்கொடைகள் மூலம் கணிசமாக அதிக நிதி திரட்டினர். இதனால், குடியரசுக் கட்சியினர் செல்வந்த நன்கொடையாளர்களை மேலும் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

கோடீஸ்வரர் மைக்கேல் ப்ளூம்பெர்க், தேர்தல் பந்தயத்தின் கடைசி வாரங்களில் ஜனநாயகக் கட்சியினருக்கு 80 மில்லியன் டொலர் நன்கொடை அளித்தார்.

இந்த நிலையில், குடியரசுக் கட்சி ஆளுநர் கிரெக் அபோட்டைத் தோற்கடித்து, டெக்சாஸின் புதிய ஆளுநராகப் பதவியேற்கவுள்ள ஜினா ஹினோஜோசா, தான் தெரிவு செய்யப்பட்டால், மாகாணத்துடனான மஸ்க்கின் நெருங்கிய உறவு தொடர்பில் தீவிர விசாரணைக்கு உத்தரவிடபப்டும் என்று இந்த ஆண்டு குறிப்பிட்டார்.

குடியரசுக் கட்சியினருக்காக மில்லியன் கணக்கில் செலவிட்ட எலான் மஸ்க்... மூவர் மட்டுமே வெற்றி | Musk Record Spending On Republicans

இதனிடையே, மஸ்க்கிற்கு எதிரான சில விசாரணைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ரஷ்யாவுக்கு எதிரான போரின் ஒரு முக்கியமான காலகட்டத்தில், உக்ரைனில் தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் அமைப்பிற்கு SpaceX நிறுவனம் விதித்த கட்டுப்பாடுகள் குறித்து விசாரித்து,

பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் விசாரணைக் குழுக்களில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் கடந்த மாதம் SpaceX, பாதுகாப்புத் துறை மற்றும் வெள்ளை மாளிகைக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

AI சாட்போட் Grok ஊடாக பெண்கள் மற்றும் சிறார்களின் பாலியல் ரீதியான படங்கள் பரப்பப்படுவது, DOGE-ஐ அவர் வழிநடத்தியபோது ஏற்பட்ட நலன்களின் மோதல் (conflicts of interest), மற்றும் NASA மற்றும் பாதுகாப்புத் துறையுடன் SpaceX கொண்டுள்ள ஃபெடரல் ஒப்பந்தங்கள் குறித்தும் மஸ்க் கேள்விகளை எதிர்கொள்ளவிருக்கிறார்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

28 Nov, 2021
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Landau, Germany

27 Nov, 2011
51ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

28 Nov, 1975
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கொக்குவில்

28 Nov, 2017
41ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

28 Nov, 1985
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சங்குவேலி, தாவடி

19 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

27 Nov, 2021
மரண அறிவித்தல்

சங்கானை, ப்ரூகன், Germany

24 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US