இந்திய பிரதமர் அம்பானி அவர்களே! எலான் மஸ்க்கின் X தள பதிவால் பரபரப்பு
Elon Musk Viral Post Over India’s Satelite internet Market: இந்தியாவில் சாட்டிலைட் இணையதள சேவை தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைமையை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் CEO எலான் மஸ்க் விமர்சித்து X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்க்கின் சர்ச்சைக்குரிய பதிவு
இந்தியாவில் வளர்ந்து வரும் செயற்கைக்கோள் இணையதள சேவை(satellite internet sector) சந்தையை கைப்பற்றுவதற்கான மோதல் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் ஸ்பேஸ்எக்ஸ்(SpaceX) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான(CEO) எலான் மஸ்க்(Elon Musk), இந்தியாவின் முன்னணி தொழில் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை உள்ளடக்கிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைமையை விமர்சித்து X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Dear Prime Minister Ambani, Please accept my humble apologies for not realizing that you are the real boss of India. Naturally, you would prefer to maintain your monopolistic exploitation of the great people of India, but would you nonetheless consider allowing Starlink to compete? There are many areas of India, as there are in all countries, with no Internet access, which denies children the opportunity for education and for small businesses the opportunity to sell their goods to a global market. Starlink would change their lives for the better. Thank you 🙏
— Elon Musk (@elonmusk) October 9, 2026
அதில் “இந்திய பிரதமர் அம்பானி அவர்களே.” “இந்தியாவின் உண்மையான தலைவர் நீங்கள் தான் என்பதை உணராததற்காக என்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.”
இந்திய மக்கள் மீதான உங்களின் ஏகபோக சுரண்டலை நீங்கள் தொடர்ந்து முன்னெடுக்கவே விரும்புவீர்கள் என்பது இயற்கையானது தான். ஆனால் அதில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தை போட்டியிட அனுமதிக்கலாமே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் இந்த சாட்டிலைட் பிராட்பேண்ட் மூலம் தொலைதூர பகுதிகளுக்கு இடையே காணப்படும் இணையதள இடைவெளியை குறைக்க முடியும், இது உள்ளூர் மாணவர்களின் கல்விக்கும், சிறு குறு வணிகங்களுக்கும் மிகவும் ஆதரவாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் தங்களது தொலைதொடர்பு கட்டமைப்பை விரிவுபடுத்த திட்டமிட்டு வரும் நிலையில், ஸ்டார்லிங் சேவைக்கான அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை அடுத்து எலான் மஸ்க்கின் அடுத்தடுத்த விமர்சன பதிவுகள் மிகப்பெரிய விவகாரமாக வெடித்துள்ளது.