மீண்டும் Deepfake சர்ச்சையில் எலான் மஸ்கின் Grok AI
எலான் மஸ்க் நிறுவிய X சமூக வலைத்தளத்தில் இயங்கும் Grok AI chatbot, மீண்டும் ஆபாச டீப்ஃபேக் (Deepfake) படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
NBC வெளியிட்ட தகவலின்படி, கடந்த மாதம் பல AI படங்கள் மற்றும் வீடியோக்கள், உண்மையான பெண்களை குறிவைத்து, பாலியல் சூழலில் உருவாக்கப்பட்டு X தளத்தில் பகிரப்பட்டுள்ளன.
இவை முந்தையவற்றை விட குறைவான கவர்ச்சியாக இருந்தாலும், பெண் பிரபலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பும் Grok AI உருவாக்கிய டீப்ஃபேக் படங்கள் உலகளவில் கண்டனங்களை பெற்றன.
Apple நிறுவனம், Grok பயன்பாட்டை App Store-இல் இருந்து நீக்குவதாக எச்சரிக்கை விடுத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு குறித்து பல்வேறு நாடுகளின் ஒழுங்குமுறை அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் இத்தகைய ஆபாச டீப்ஃபேக் பரவுவது, தனியுரிமை மீறல் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல் எனக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#ElonMusk #GrokAI #DeepfakeScandal #AIControversy #TechNews #PrivacyRights #AppleVsGrok