கனடாவில் இஸ்லாமிய ஆசிரியைக்கு நேர்ந்த நிலை! சர்ச்சைக்குரிய சட்டத்தின் விளைவு
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் முக்காடு அணிந்ததற்காக இஸ்லாமிய ஆசிரியை தனது வேலையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரெஞ்சு மொழி பேசும் கனேடிய மாகாணமான கியூபெக்கில் முக்காடு அணிந்திருந்த இஸ்லாமிய ஆசிரியை ஒருவர், சர்ச்சைக்குரிய மாகாண சட்டத்தை காரணம் காட்டி, அவரது பணியில் இருந்தது நீக்கப்பட்டார்.
கியூபெக்கில் உள்ள செல்சியா தொடக்கப் பள்ளியில் தரம் 3 ஆசிரியையான ஃபதேமே அன்வாரி (Fatemeh Anvari), பல மாதங்கள் வெஸ்டர்ன் கியூபெக் பள்ளி வாரியத்தில் மாற்று ஆசிரியராகப் பணிபுரிந்த பிறகு நிரந்தரப் பணியிடம் வழங்கப்பட்டது, அவர் தனது முழு நேரப் பணியைத் தொடங்கியுள்ளார்.
ஒரு மாதத்திற்குப் பிறகு, பள்ளியின் முதல்வர், அன்வாரி தலையில் முக்காடு போட்டதால் வகுப்பறைக்கு வெளியே உள்ள நிலைக்கு மாற்றப்பட்டதாகக் கூறியுள்ளார்.
அப்போது, "உண்மையாக, அந்த வினாடியில், அது அதிர்ச்சியாக இருந்தது. அதை ஏற்றுக்கொள்வதற்கு மிகவும் கடினமாக இருந்தது,” என்று அன்வாரி CBC-யிடம் தெரிவித்தார்.
கியூபெக்கின் மசோதா 21 (Bill 21), செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உட்பட பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது தலைப்பாகை, முக்காடு, சிலுவைகள் மற்றும் கிப்பாக்கள் போன்ற மத அடையாளங்களை அணிவதைத் தடை செய்கிறது.
இச்சட்டம் முக்காடு அணியும் இஸ்லாமிய பெண்களை மையமாகக் கொண்ட ஒரு மெல்லிய தாக்குதல் என்றும், அது மக்கள் தங்கள் மதம் மற்றும் அவர்களின் வேலையைத் தேர்வுசெய்யத் தூண்டுகிறது என்றும் விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
இந்த பாரபட்சமான சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, ஆனால் இதில் இறுதி தீர்ப்பு கிடைக்க பல ஆண்டுகள் ஆகலாம்.