லண்டனில் 21 வயது இஸ்லாமிய பெண்ணுக்கு நேர்ந்த நிலை! அசிங்கமாக இருப்பதாக வேதனை
பிரித்தானியாவில் இஸ்லாமிய பெண் ஒருவர் இனரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் GD(உண்மையான பெயர் வெளியிடப்பவில்லை) என்று அறியப்படும் 21 வயது மதிக்கத்தக்க இஸ்லாமிய பெண், கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் திகதி Bath Spa-வில் இருந்து London Paddington-க்கு இரயிலில் திரும்பியுள்ளார்.
Harrow-வில் வசித்து வரும் இவர் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடுவதற்காக மூன்று நண்பர்களுடன் Bath நகருக்கு சென்று திரும்பிய போது, இனரீதியாக பாதிக்கப்பட்டு, கண்ணீர்விட்டு அழுதுள்ளார்.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அன்றைய தினம், இரயில் இருக்கை இருந்தது. அப்போது அந்த இருக்கையில் இருந்த நபரிடம் நான் இங்கு உட்காரலாமா என்று கேட்டேன். உடனே அவர் கெட்டவார்த்தையில் இனரீதியாக பேசினார்.
அங்கிருந்த மற்றவர்களிடல் ஒருவேளை நீங்கள் இரயிலை வெடிக்க வைக்கலாம், பயங்கரவாதி, குண்டு வெடிப்பாளர் என்று கூறினர். எங்களை காயப்படுத்துவது போன்றே பேசினர்.
இதனால் நாங்கள் மிகவும் குழப்பமடைந்தோம். அவர்கள் இனரீதியாக பேசுவது தெரிந்தும், இரயிலில் இருந்த எவரும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை. சிலர் இதைக் கண்டு சிரித்தனர்.
பிரித்தானியா சமூகத்தில், இன்னமும் இன துஷ்பிரயோகம், இனவெறி, காலனித்துவம் போன்றவை இருப்பதை பார்க்கும் போது, அசிங்கமாக இருக்கிறது.
இந்த சம்பவம் குறித்து அதன் பின் நடத்துனரிடம் கூறிய போது, அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டார். அந்த நபர் குடிபோதையில் இருப்பதாக கூறப்பட்டது.
இதை பார்க்கும் போது, பொதுபோக்குவரத்தை நினைத்து நான் கவலைப்படுவதாகவும், பேருந்திகளில் பயணிப்பதை அதிகம் தவிர்ப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து புகார் அளித்துள்ள அவர், விரைவில் இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.