இந்திய மாநிலம் ஒன்றில் முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரியாகும் முஸ்லீம் பெண்
இந்திய மாநிலம் ஒன்றில் முதல் முறையாக முஸ்லீம் பெண் ஒருவர் ஐஏஎஸ் அதிகாரியாகவுள்ளார்.
யார் அவர்?
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆா்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மத்திய பணியாளர் தேர்வாணையம் யுபிஎஸ்சி (UPSC ) சிவில் சர்வீஸ் தேர்வினை நடத்துகிறது.
இந்த தேர்வில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உள்ளன. இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் https://upsc.gov.in/ இணையதளத்தில் வெளியாகின.
இந்நிலையில், மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் உள்ள வறண்ட மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட யவத்மால் பகுதியில் தற்போது மகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த பகுதியில் இருக்கும் ஆட்டோ ஓட்டுநரின் மகளான அதீப் அனாம், 2024 ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 142வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர் தான் இந்த மாநிலத்தில் இருந்து இந்திய நிர்வாகப் பணியில் சேர்ந்த முதல் முஸ்லிம் பெண்மணி ஆனார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பெண்கள் உயர்கல்வி கற்பதை இந்த சமூகம் எதிர்த்து வருகிறது. ஆனால், நாம் அதனை பற்றி கவலைப்படாமல் இலக்கை அடைய கவனம் செலுத்த வேண்டும் என்று எனது தந்தை என்னிடம் கூறினார்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |