கும்பமேளா வந்தவர்களுக்கு தங்க இடமும், உண்ண உணவும் கொடுத்த முஸ்லிம்கள்
மகா கும்பமேளாவுக்கு வந்தவர்களுக்கு முஸ்லிம்கள், தங்க இடமும், உண்ண உணவும் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லீம்கள் நற்செயல்
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இங்கு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதில் இருந்து சாமியார்கள், பக்தர்கள் என லட்சக்கணக்கானோர் பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் பிரயாக்ராஜில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் நகாஸ் கொஹன்னா, சவுக், ரோஷன்பாக், சேவை மண்டி, ராணி மண்டி மற்றும் ஹிம்மத்கன்ஞ் ஆகிய பகுதிகளில் நடைபெறுகின்றன.
இதனிடையே, கும்பமேளாவில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு சிலர் உயிரிழந்தனர். இந்த நாளை அடுத்து பலரும் காவல் நிலையங்களில் தஞ்சம் அடைந்தனர்.
இதனை பார்த்த முஸ்லீம்கள் உதவி செய்யும் நோக்கில், தங்களின் நிர்வாகப் பள்ளியான யாத்கார் ஹுசைனி இண்டர் காலேஜின் வளாகத்தை திறந்து விட்டனர்.
அங்கு அவர்களை தங்க வைத்து குளிருக்கான கம்பளிகளும், போர்வைகளும் வழங்கப்பட்டன. மேலும், மூன்று வேளை உணவையும் பரிமாறினர்.
இதேபோல, முஸ்லிம்களின் மார்கெட் கட்டிடங்களின் வளாகத்திலும் கும்பமேளாவுக்கு வந்தவர்களை தங்க வைத்தனர். இன்னும் சிலர், தங்கள் வீடுகளில் தங்க வைத்தனர். அதோடு அவர்களுக்கு தேநீர், பிஸ்கட் மற்றும் குடிநீர் பாட்டில் ஆகியவற்றை கொடுத்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |