இந்த உணவுகளை மட்டும் மறந்து கூட மாதவிடாய் நாட்களில் சாப்பிடாதீங்க.... பெரிய பிரச்சினை ஏற்படும்
Women
menstrual problems
By Kishanthini
பொதுவாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி, வயிறு இறுக்குதல் , தசை வலி, உடல் அசதி போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வார்கள்.
சாதாரண வலி என்றாலும் இதற்காகப் பலர் இன்றைய காலங்களில் வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்கின்றனர்.
ஆனால் மாத்திரைகளை ஒவ்வொரு மாதமும் பயன்படுத்துவது பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே மாதவிடாய் வலியை கட்டுப்படுத்த ஒரு சில உணவுகளை நாம் தவிர்ப்பது நல்லது. தற்போது அந்த உணவுகள் என்ன என்பதை பார்ப்போம்.
- மாதவிடாய் காலத்தில் அதிகமாக உப்பு சேர்த்துக்கொள்வதை குறையுங்கள். அதேபோல் சோடியம் நிறைந்த பதப்படுத்தப்பட்ட சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளையும் தவிர்க்கவும். இதனால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று மந்தம் பசியின்மையை தவிர்க்கலாம்.
- பாஸ்தா, பீட்ஸா பிரெட் வகைகள், பிஸ்கட்ஸ் , பரோட்டா போன்ற மைதாவில் செய்யப்படும் உணவுகளை முற்றிலுமாகத் தவிர்த்துக்கொள்ளலாம். இது மலச்சிக்கல், வாயுத் தொல்லை , அஜீரணம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரை சமநிலையின்மை போன்ற பிரச்னைகளை உண்டாக்கும்.
- மாதவிடாய் காலத்தில் சர்க்கரை அதிகம் உண்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருக்கும். இதனால் பதட்டம், திடீரென மன அமைதி, வயிறு இறுக்கிப் பிடித்தல் போன்றவை ஏற்படும்.
- எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட பஜ்ஜி, பக்கோடா, போண்டா போன்ற உணவுகள் முற்றிலுமாகத் தவிர்க்கவும். அவ்வாறு உண்பதால் அவற்றில் இருக்கும் கெட்ட கொழுப்புகள் உங்களுக்கு வயிற்று வலி, முதுகு வலி ,வயிற்று மந்தம் போன்றவை அதிகரிக்கும்.
- பால் , இறைச்சி போன்ற அதிக கால்சியம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதால் மார்பகங்களில் வலி , உடல் அசதி , தசை வலி போன்றவை ஏற்படும். அதேபோல் அதிகமாக காஃபி, டீ குடிப்பதையும் தவிருங்கள்.
- Gas நிரப்பப்பட்ட குளிர்பானங்களை வயிற்று வலி காரணமாக அதிகம் குடிக்கிறீர்கள் என்றால் அவற்றைத் தவிருங்கள்.அதில் இருக்கும் அதிக அளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை வயிற்று வலியை உண்டாக்குவதோடு உடல் அசதியை ஏற்படுத்தும்.
- தினமும் உணவோடு ஊறுகாய் உட்கொள்ளும் பழக்கம் இருந்தால் அதை மாதவிடாய் காலத்தில் தவிர்க்கவும். அதேபோல் நூடுல்ஸ், அப்பளம் , சிப்ஸ் , ஃபிரிஜ்ஜில் வைக்கப்பட உணவுகள் எனப் பதப்படுத்தப்பட்ட உணவுகள் எதுவாயினும் அவற்றைத் தவிர்த்தல் நல்லது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US