விசா பரிசீலனைக்காக CSK அணியில் வெளியேறும் முக்கிய வீரர்? உள்ளே வரும் இலங்கை வீரர்..வெளியான தகவல்
டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக தனது விசாவை பரிசீலிக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் முஸ்தாபிசூர் ரஹ்மான் வங்கதேசத்திற்கு திரும்புகிறார்.
முஸ்தாபிசூர் ரஹ்மான்
ஐபிஎல் 2024 தொடரில் வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தாபிசூர் ரஹ்மான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டிய முஸ்தாபிசூர், தற்போது அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக உள்ளார்.
சென்னை அணி வரும் 5ஆம் திகதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் முஸ்தாபிசூர் ரஹ்மான் இப்போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
அதாவது, டி20 உலகக்கோப்பைக்கான தனது அமெரிக்க விசா குறித்து பரிசீலிக்க முஸ்தாபிசூர் ரஹ்மான் வங்கதேசம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசா பரிசீலனை
விசா மீதான பரிசீலனை முடிவுற்ற பின்னர் முஸ்தாபிசூர் ரஹ்மான், வரும் 7 அல்லது 8ஆம் திகதிகளில் இந்தியாவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் அணிகளுக்கு எதிரான போட்டிகளை தவறவிடுவார் என தெரிகிறது.
ஒருவேளை அவர் 8ஆம் திகதி திரும்பும்பட்சத்தில் இலங்கையின் மஹீஷ் தீக்ஷணா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |