சிக்ஸர் வந்த பந்தை பறந்து தடுத்த முஸ்தபிசுர்! மிரண்டு போன பெங்களூரு வீரர்கள்: வைரலாகும் வீடியோ
பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் சிக்ஸர் போன பந்தை அற்புதமாக தாவி பிடித்து தடுத்து முஸ்தபிசுர் ரஹ்மான் வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி 3-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பெங்களூரு அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஆட்டத்தின் 8.5-வது பந்தை கார்த்திக் தியாகி, மேக்ஸ்வலுக்கு வீசினார். அதை எதிர் கொண்ட மேக்ஸ்வெல் லெக் திசையில் புல் ஷாட் அடித்தார்.
பந்து சிக்ஸருக்கு பறக்க, உடனே அங்கிருந்த பீல்டர் முஸ்தபிசுர் ரஹ்மான் கேட்ச் பிடிக்க முடியாது என்பதை தெரிந்து, மேலே தாவி சிக்ஸர் போக வேண்டிய பந்தை தடுத்து நிறுத்தினார்.
பந்தை சிக்ஸருக்கு விரட்டி மேக்ஸ்வேலும், இது சிக்ஸர் என்று ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்ததால், ஐந்து ஓட்டை முஸ்தபிசுர் ரஹ்மான் தடுத்தார்.
இவரின் பீல்டிங்கைக் கண்ட எதிரணி ரசிகர்கள் மற்றும் பெங்களூரு அணி வீரர்கள் மிரண்டு போய் பாராட்டினர்.
இந்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.