பேட்டிங்கின்போது திடீரென விலகிய ஜோ ரூட்! பந்துவீச்சை நிறுத்த முற்பட்டு..தடுமாறி விழுந்து உருண்ட ரஹ்மான்
உலகக்கோப்பை போட்டியில் வங்கதேச பந்துவீச்சாளர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் பந்துவீச ஓடி வந்தபோது, இங்கிலாந்தின் ஜோ ரூட் விலகியதால் தடுமாறி கீழே விழுந்தார்.
இங்கிலாந்து - வங்கதேசம் மோதல்
தரம்சாலா மைதானத்தில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்று வங்கதேசம் பந்துவீச்சை தெரிவு செய்ததால் இங்கிலாந்து முதலில் துடுப்பாடி வருகிறது. பேர்ஸ்டோவ் 52 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனதைத் தொடர்ந்து ஜோ ரூட் களமிறங்கினார்.
Twitter (@englandcricket)
தடுமாறி விழுந்த பந்துவீச்சாளர்
ஆட்டத்தின் 23வது ஓவரை முஸ்தஃபிசூர் ரஹ்மான் வீச ஓடி வந்தார். அப்போது ஸ்ட்ரைக்கில் இருந்த ஜோ ரூட் திடீரென விலகினார். இதனால் வேகமாக ஓடி வந்த முஸ்தஃபிசூர் ரஹ்மான் நிற்க முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததுடன் உருண்டார்.
உடனடியாக வங்கதேச வீரர்கள், நடுவர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட் வந்து அவரை சோதித்தனர். நல்வாய்ப்பாக அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்படவில்லை.
அதனைத் தொடர்ந்து முஸ்தஃபிசூர் ரஹ்மான் அந்த ஓவரை வீசி முடித்தார். தொடக்க வீரர் தாவித் மலான் தனது 5வது அரைசதத்தினை கடந்து விளையாடி வருகிறார்.
Twitter (@englandcricket)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |