நீளமான கூந்தல் முதல் நரைமுடி வரை இந்த ஒரு எண்ணெய் போதும்: எப்படி பயன்படுத்துவது?
முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் அனைவருக்கும் இருக்கிறது.
அந்தவகையில், வீட்டிலேயே நரைமுடியை கருப்பாக்க மற்றும் நீளமான கூந்தலை பெற கடுகு எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
முடி வளர்ச்சி எண்ணெய்
கடுகு எண்ணெயை சம பாகங்களில் தேங்காய் எண்ணெயுடன் கலந்து கலந்து தடவவும்.
இந்த எண்ணெய்களை சிறிது சூடாக்கி உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.
இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு மறுநாள் கழுவவும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும்.
பிளவு முனைகள் பழுது
கற்றாழை ஜெல்லுடன் கடுகு எண்ணெயை கலந்து முடியின் முனைகளில் தடவவும்.
கழுவுவதற்கு முன் 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். இந்த கலவை பிளவு முனைகளைத் தடுத்து முடியை மென்மையாக்கும்.
நரை முடி தடுப்பு
மருதாணி பொடியுடன் கடுகு எண்ணெயை கலந்து முடிக்கு தடவவும்.
பின் கழுவுவதற்கு முன் 1-2 மணி நேரம் அப்படியே வைக்கவும். இதனால் முடி முன்கூட்டியே நரைப்பதை தாமதப்படுத்த உதவுகிறது.
பொடுகு சிகிச்சை
சில கறிவேப்பிலை இலைகள் மற்றும் 1 டீஸ்பூன் வெந்தயத்துடன் கடுகு எண்ணெயை சூடாக்கவும்.
பின் வடிகட்டி உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். இதற்கடுத்து லேசான ஷாம்பூவுடன் கழுவுவதற்கு முன் ஒரு மணி நேரம் விடவும்.
இந்த எண்ணெய் பொடுகை எதிர்த்துப் போராடி உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |