வழுக்கையிலும் முடி வளர இந்த ஒரு எண்ணெய் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.
தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க கடுகு எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
கடுகு எண்ணெயில் நிறைந்துள்ள ஒமேகா-3, ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் முடி வளர்ச்சியைத் தூண்டி, முடியை பளபளப்பாக மாற்றுகின்றன.
1. தேவையான பொருட்கள்
- கடுகு எண்ணெய்- 1 கப்
- கறிவேப்பிலை- 2 கொத்து
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெயை சேர்த்து சூடுபடுத்தி அதில் கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்கவைத்து பின் குளிர வைக்க வேண்டும்.
பின் அந்த எண்ணெயை வடிகட்டி, ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

அடுத்து இந்த எண்ணெயை உச்சந்தலை முதலில் முடியின் நுனி வரை தடவி ஆயில் மசாஜ் செய்யவும்.
பின்னர் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
2. தேவையான பொருட்கள்
- கடுகு எண்ணெய்- 1 கப்
- வெந்தயம்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் வெந்தய விதைகளை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து மறுநாள் அதை அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அத்துடன் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து, உச்சந்தலையில் தடவி 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அடுத்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் தலைமுடி வலுவடைந்து, புதிய முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |