தலைமுடி தாறுமாறாக வளர இந்த ஒரு எண்ணெய் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
அனைவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.
அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க கடுகு எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு பாத்திரத்தில் கடுகு எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடாக்கவும்.
பின்னர் இந்த எண்ணெயை தலையில் நன்கு தடவி வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும்.
இதற்குப் பிறகு, நுனி முடி வரை இந்த எண்ணெயை தடவி இரவு முழுவதும் அப்படியே விடவும்.
இதற்கடுத்து மறுநாள் காலையில் எழுந்து மென்மையான ஷாம்பூ கொண்டு தலைமுடியை சுத்தம் செய்யவும்.
இந்த எண்ணெயை வாரத்திற்கு ஒரு முறை தலைமுடிக்கு பயன்படுத்தி வர முடி எப்போதும் ஆரோக்கியமாக நன்கு வளரும்.
கடுகு எண்ணெய் ஹேர் மாஸ்க்
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் கடுகு எண்ணெயை சேர்த்து அதில் முட்டையை சேர்த்து இந்த கலவையை நன்கு கலக்கவும்.
இப்போது அதை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்து தலைமுடியில் சுமார் 30 நிமிடங்கள் அப்படியே விடவும்.
அதன் பிறகு, முடியை ஷாம்பு தடவி சுத்தம் செய்ய வேண்டும்.
இதனை ஒரு மாதத்திற்கு 2-3 முறை தொடர்ந்து பயன்படுத்தலாம். இதனால் கூந்தலை பட்டுப் போல மாறும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |