விஜய்யை தொடர்ந்து விமர்சிப்பது ஏன்? மூத்த பத்திரிகையாளர் அப்துல் முத்தலீஃப்
விஜய் தான் களத்திற்கு வர வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் அப்துல் முத்தலீஃப் தெரிவித்துள்ளார்.
களத்திற்கு வராத விஜய்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சமீபத்தில் ஈரோட்டில் உள்ள விஜயமங்கலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இதில் பேசிய அவர், "நாங்கள் களத்தில் இல்லாதவர்கள் குறித்து பேசி நேரத்தை வீணடிப்பதில்லை.
நான் எவ்வளவு நேரம் பேசுகிறேன் என பார்க்காதீர்கள் என்ன பேசுகிறேன் என பாருங்கள். மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரச்சினைகளை பேசுகிறேன். மக்கள் பிரச்சினைகளை பேசுவது தானே அரசியல்" என கூறியிருந்தார்.
விஜய்யின் இந்த பேச்சு குறித்து விமர்சித்துள்ள மூத்த பத்திரிக்கையாளர் அப்துல் முத்தலீஃப், "திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளதாகவும், விஜய்யின் தவெக தான் களத்தில் இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.
மேலும், விஜய் தினமும் களத்திற்கு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |