தங்கத்தின் மீதான இந்தியர்களின் ஆர்வத்தை செல்வமாக்கிய குடும்பம்
இந்திய மக்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் ஆராவத்தைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் செல்வத்தை ஈட்டிய குடும்பத்தைப்பற்றி பார்போம்.
இந்தியாவில் தங்கத்தின் மீதான ஆர்வம் உலகளவில் தனித்துவமானது. இந்த ஆர்வத்தை வணிக வாய்ப்பாக மாற்றி, கோடிக்கணக்கான செல்வத்தை குவித்துள்ளது முத்தூட் குடும்பம்.
முத்தூட் ஃபைனான்ஸ் லிமிடெட் (Muthoot Finance Limited) நிறுவனம் கிட்டத்தட்ட 9 தசாப்தங்களாக தங்க அடமானக் கடன் வழங்கி வருகிறது.
தங்க விலை உயர்வால், மக்கள் தங்கள் நகைகளை அடமானம் வைத்து குறுகிய கால பணம் பெறும் நிலை அதிகரித்துள்ளது. இதனால், நிறுவனத்தின் பங்கு விலை சாதனை உயரத்தை எட்டியுள்ளது.

Bloomberg Billionaires Index படி, முத்தூட் குடும்பத்தின் மொத்த செல்வம் தற்போது 13 பில்லியன் டொலரைக் கடந்துள்ளது.
2023-24 ஆம் ஆண்டில், இந்தியாவில் தங்க அடமானக் கடன்கள் 35 சதவீதம் அதிகரித்துள்ளன.
முத்தூட் ஃபைனான்ஸ் மட்டும், ரூ.12,500 கோடி மதிப்பிலான கடன்களை வழங்கியுள்ளது.
இது, இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான State Bank of India வழங்கிய தங்கக் கடன்களை விட அதிகம்.
நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜார்ஜ் அலெக்சாண்டர் முத்தூட் கூறியதாவது: “இப்போது பணக்காரர்களுக்குக் கூட தங்கக் கடன் எடுப்பது ஒரு ‘fashion’ ஆகிவிட்டது. சந்தை வெடித்து வளர்கிறது” என தெரிவித்துள்ளார்.
முத்தூட் ஃபைனான்ஸ், ஆண்டுதோறும் 200 புதிய கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது. தற்போது 7,500-க்கும் மேற்பட்ட கிளைகள் இந்தியா முழுவதும் இயங்குகின்றன.
கடன் பெறும் வாடிக்கையாளர்களின் பெரும்பாலானோர் குறைந்த வருமானம் கொண்டவர்கள் என்றாலும், கடனை திருப்பிச் செலுத்தத் தவறும் விகிதம் மிகக் குறைவாக உள்ளது.
தங்கம் இந்திய கலாச்சாரத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. திருமணங்கள், தீபாவளி போன்ற விழாக்களில் தங்கம் வாங்குவது வழக்கமாகும். இதே ஆர்வம், முத்தூட் குடும்பத்தை உலகின் செல்வந்தர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |