பிக்பாஸில் வென்ற கோப்பை மீது சத்தியம் செய்து உருக்கமாக பேசிய முத்துக்குமரன்.., வைரல் வீடியோ
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை இந்த முறை விஜய்சேதுபதி அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இதில், முதல் ஐந்து போட்டியாளர்களாக முத்துக்குமரன், சௌந்தர்யா,விஷால், பவித்ரா, ரயன் ஆகியோர் இருந்தனர்.
பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
இதில், அதிகவாக்குகளை பெற்ற முத்துக்குமரன் வெற்றிக் கோப்பையை பெற்றார்.
இதில், முத்துக்குமரனுக்கு பரிசுத் தொகையாக ரூ.40.50 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதுத்தவிர பிக்பாஸ் வீட்டில் இருந்ததுக்கான சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பரிசுத்தொகையை வைத்து கடன் இல்லாமல் வீடு கட்டுவேன் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் பணத்தை சமூகத்திற்காகவும் செலவு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.
வெற்றிக்கோப்பையுடன் வெளியில் வந்த முத்துக்குமரன், கையில் கோப்பையை வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
நன்றி உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றி ❤️🙏🏼 pic.twitter.com/laipHIbFHa
— Naan Muthukumaran (@kumaran_kural) January 20, 2025
அதில், கோப்பையின் மீது சத்தியம், என் உழைப்பின் மீது சத்தியம் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பலர் முத்துக்குமரனுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |