Gingee Mutta Mittai: நாவில் வைத்ததும் கரையும் முட்டை மிட்டாய்
பொதுவாக நாம் அனைவருக்கும் குறிப்பிட்ட இடங்களில் கிடைக்கும் உணவுகள் உண்பது மிகவும் பிடித்தமான ஒன்று.
அந்தவகையில், செஞ்சி என்றால் முட்டை மிட்டாய் என்று பலராலும் கூறப்படும் அளவுக்கு ஆகிவிட்டது.
பலரின் மனம் கவர்ந்த முட்டை மிட்டாய் வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பால்- 1 லிட்டர்
- பாதாம்- 50g
- நெய்- ¼ கப்
- முட்டை- 6
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
- சர்க்கரை- 1 கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து நன்கு சுண்டவைத்து பால் கோவா செய்து எடுத்துக்கொள்ளவும்.
பின் 6 மணிநேரம் ஊறவைத்த பாதாமை ஒரு மிக்ஸிஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் பாக் கோவா, அரைத்த பாதாம், நெய் மற்றும் முட்டை சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
பின்னர் சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
இதனைதொடர்ந்து கலந்த கலவையை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கெட்டியாகும் வரை கைவிடாமல் கலக்கவும்.
அடுத்து அடுப்பில் குக்கரை மிதமான தீயில் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து அதன் மேல் முட்டை கலவையை வைத்து 35 நிமிடம் வேகவைக்கவும்.
அதன் பின் அதன் மேல் நறுக்கிய பாதாம், நெய் சேர்த்து துண்டுகளாக வெட்டி சாப்பிடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |