நாவூறும் சுவையில் முட்டை பணியாரம்.., எப்படி செய்வது?
Egg
By Yashini
பணியாரம் என்றாலே வீட்டில் உள்ள பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் முட்டை பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெங்காயம்- 2
- தக்காளி- 2
- குடைமிளகாய்- 1
- பச்சைமிளகாய்- 2
- கேரட்- 1
- முட்டை- 3
- கறிவேப்பிலை- 1 கொத்து
- மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டை சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், துருவிய கேரட் சேர்த்து கலந்துகொள்ளவேண்டும்.

அடுத்து இதில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
இதற்கடுத்து அடுப்பில் பணியார சட்டி வைத்து சூடானதும் அனைத்து குழியிலும் எண்ணெய் சேர்க்கவும்.
இறுதியாக, கலந்து வைத்த முட்டை கலவையை பணியாரம் போல் இரண்டு பக்கமும் சுட்டு எடுத்தால் சுவையான முட்டை பணியாரம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US