ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவன் இதுதான் - உண்மையை போட்டுடைத்த முரளிதரன்
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் ஆடும் லெவன் அணி வீரர்கள் குறித்து பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்துள்ளது. அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை கடும் போட்டிக்கு மத்தியிலும் தேர்வு செய்தனர்.
இந்த ஏலத்தில் அதிகப்பட்சமாக மும்பை அணியால் இஷான் கிஷான் ரூ.15.25 கோடிக்கும், சென்னை அணி தீபக் சாஹரை ரூ.14 கோடிக்கும் விலை போயினர். அதேசமயம் சுரேஷ் ரெய்னா, ஷகிப் அல் ஹசன், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் ஏலம் எடுக்கவில்லை என்ற செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.
ஒவ்வொரு அணியும் ஐபிஎல் ஏலத்தில் 25 வீரர்களை எடுத்தாலும் ஆடும் லெவனில் யார் இடம் பெறுவார்கள் என்ற கேள்வி எழுவது வழக்கம். இதில் ஹைதராபாத் அணியின் ஆடும் லெவன் அணி வீரர்கள் குறித்து பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் அபிஷேக் சர்மா தொடக்க ஆட்டகாரர்களாகவும், அடுத்தபடியாக ஏய்டன் மர்க்ரம், ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரண், அப்துல் சமாத், வாஷிங்டன் சுந்தர் என அடுத்தடுத்து களமிறங்கவுள்ளதாக முரளிதரன் கூறியுள்ளார். இதனால் நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகள் பரபரப்பு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.