மதுரை கறிதோசை செய்ய வேண்டுமா? இதை மட்டும் சேர்க்காதீங்க
தோசை என்றாலே பலருக்கும் பிரியம், அதுவும் வெஜிடபிள் தோசை, நெய் தோசை, பொடி தோசை என பல வெரைட்டிகள் இருந்தாலும் மதுரை கறிதோசைக்கு அடிமையானவர்கள் பலர்.
மட்டனின் அலாதி ருசியுடன் கறிதோசை சுவைக்க உங்களுக்கும் ஆசையா? வீட்டிலேயே எப்படி செய்யலாம் என தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
200 கிராம்-மட்டன் கொத்து கறி
-
3-முட்டை
- 1- வெங்காயம்
-
1-தக்காளி
-
1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டுபேஸ்ட்
- 1 ஸ்பூன் -மிளகு தூள்
-
1/2 ஸ்பூன்- மிளகாய் தூள்
- 1/2 ஸ்பூன்- கரம் மசாலா
- 1/2 ஸ்பூன்- மல்லி தூள்
- 1/2 ஸ்பூன் சீரக தூள்
-
1/4 ஸ்பூன் -மஞ்சள் தூள்
- 1/2 ஸ்பூன்-சோம்பு
- 1/2 ஸ்பூன்- கடுகு
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
மட்டனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து குக்கரில் 5 விசில் வரும் வரை வேக வைக்கவேண்டும்.
பின் முட்டையை அடித்துக் கொண்டு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானவுடன் கடுகு மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
பின் அதனுடன் சிறிது வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி விட்டு தக்காளி சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்க வேண்டும்.
பின் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், சீரக தூள் சேர்த்து எடுக்க வேண்டும்.
அதனுடன் வேக வைத்த கறியை தண்ணீரோடு சேர்த்து நீர் வற்றி கெட்டியாக வரும் வரை அடுப்பில் கொதிக்க விட வேண்டும்.
அடுப்பில் தோசைக்கல்லில் மாவை எடுத்து சிறிய ஊத்தப்பம் ஒன்றை ஊற்றவும்.
சிறிது வெந்ததும் ஒரு கரண்டி முட்டையை ஊற்றி, பின் அதற்கு மேல் ஒரு கரண்டி கறியை வைக்க வேண்டும்.
அதன் மேல் சிறிது மிளகு தூள் தூவிவிட்டு சுற்றி எண்ணெய் விட்டு திருப்பி போட்டு தோசையை அழுத்தி விடவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |