நாவூறும் சுவையில் செட்டிநாடு ஸ்டைல் மட்டன் கீமா: எப்படி செய்வது?
அசைவ உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன். மற்ற உணவுகளை காட்டிலும் மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும்.
மட்டன் கீமா வெள்ளை சாதம், சப்பாத்தி, தோசை, பூரி, நாண், புலாவ் என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
வீட்டிலேயே எளிதாக சுவையான மட்டன் கீமா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மட்டன் கொத்துக்கறி - 200g
- சின்ன வெங்காயம்- 10
- தக்காளி- 2
- காய்ந்த மிளகாய்- 4
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- கரம் மசாலா- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- பிரியாணி இலை- 1
- கிராம்பு- 2
- இலவங்கப்பட்டை - சிறிய துண்டு
- இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்
- புதினா இலை- சிறிதளவு
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் மட்டன் கொத்துக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்து தண்ணீரை நன்றாக வடிகட்டி தனியே வைக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளியை சேர்த்து நன்கு விழுது போல் அரைத்து எடுத்து கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் வாயால் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரியாணி இலை, கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து வறுக்கவும்.
பிறகு பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும்.
அனைத்தும் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அலசி வைத்துள்ள மட்டன் கொத்துக்கறியை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.
அடுத்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு, பொடியாக நறுக்கிய புதினா இலைகள் சேர்த்து நன்றாக கிளறி மூடி வைத்து 10 நிமிடங்கள் வேகவைக்கவும்.
10 நிமிடங்களுக்கு பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது சேர்க்கவும். பிறகு சிறிது தண்ணீர் ஊற்றி மட்டன் கொத்துக்கறி மென்மையாக வேகும் வரை சமைக்கவும்.
கீமா கறி மென்மையாக வெந்தவுடன் அடுப்பை அனைத்து இறக்கினால் சுவையான மட்டன் கீமா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |